1. செய்திகள்

பூச்சிக்கொல்லி மருந்தை முழுமையா பயன்படுத்தாதீங்க- வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் மாணவர் விளக்கம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Don't overuse pesticides for Agriculture student explains whitefly control

பச்சமலையான் கோட்டை கிராமத்தில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை பற்றி விவசாய பெருமக்களுக்கு அளித்த மதுரை வேளாண் கல்லூரி மாணவர் செயல் விளக்கம் அளித்தார்.

மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் கொண்ட குழு கொடை ரோடு பகுதியில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி பயின்று வருகின்றனர். இவர்களுள் ஒருவரான ஹரிமாதவ் என்ற மாணவர் பச்சமலையான்கோட்டை கிராமத்தில் கந்தப்பன் என்பவரின் தென்னந்தோப்பில் தென்னையைத் தாக்கும் வெள்ளைஈக்களைக் கட்டுபடுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை பற்றிய செயல் விளக்கங்களை விரிவாக விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். அவற்றின் விவரம் பின்வருமாறு-

வெள்ளை ஈக்கள் தாக்குதலின் அறிகுறிகள்:

வெள்ளை ஈக்களின் இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இரண்டும் இலைகளிலிருந்து சாறுகளை உறிஞ்சி அவற்றில் தேன் துளியினை வெளியேற்றும். பாதிக்கப்பட்ட திசுக்களில் வெளிறிய புள்ளிகள் மற்றும் பூசண வளர்ச்சிகள் உருவாகும். இதன் பின்னர் இலைகள் சிதைந்து சுருண்டு அல்லது குவளை போன்ற வடிவத்தை பெறும்.

மேலாண்மை முறைகள்:

மஞ்சள் நிறமுடைய பாலீத்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஓட்டும் பொறிகளை 5 அடிக்கு ஒன்றரை அடி என்ற அளவில் ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில், 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு வெள்ளை ஈக்களை கவர்ந்தழிக்கலாம்.

மேலும் படிக்க: விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம்| நிரந்தல் பந்தல் அமைக்க 50% மானியம்| லால்குடியில் விசாயப்புரட்சி| வானிலை தகவல்

விளக்குப் பொறிகள் ஏக்கருக்கு 2 வீதம் 6 முதல் 11 மணி வரையிலும் ஒளிர செய்ய வேண்டும். பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க, ஓலைகளின் அடிப்புறத்தில் தண்ணீரை வேகமாகப் பீய்ச்சி அடித்தும் கட்டுப்படுத்தலாம். கிரைசோபெர்லா என்னும் இரை விழுங்குகிகளை ஏக்கருக்கு 400 எண்கள் விட வேண்டும். ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வழங்கப்படும், என்கார்சியா என்ற ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 100 என்ற அளவில் வெளியிட வேண்டும். கரும்பூசணத்தைக் கட்டுப்படுத்திட ஒரு லிட்டர் நீருடன் 25 கிராம் மைதா பசையினை கலந்து ஓலையின் மீது தெளிக்க வேண்டும். அவை வெயில் பட்டு காயும் பொழுது கரும்பூசணத்துடன் உதிர்ந்துவிடும்.

மேலும் படிக்க: நிரந்தல் பந்தல் அமைக்க 50% மானியம்| லால்குடியில் விசாயப்புரட்சி| வானிலை தகவல்

வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாகும் பொழுது பொறிவண்டுகள் போன்ற இரை விழுங்கிகுள் இயற்கையாக உருவாகும். தென்னை மரத்தினைச் சுற்றி தட்டைப் பயறு போன்ற பயறு வகைகளை ஊடுபயிராகவும், மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட சாமந்தி, சூரியகாந்தி போன்றவற்றை வரப்புப் பயிராகவும் பயிரிட்டு நன்மை செய்யும் பூச்சிகளை கவரலாம். நன்மை செய்யும் பூச்சிகளை பூச்சிக்கொல்லி மருந்துகள் அழித்து விடுவதனால், முற்றிலுமாக பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றை கடைபிடித்தால் இந்த பிரச்னையிலிருந்து தென்னை மரங்களைக் காப்பாற்றலாம்.

மேலும்,களை சுகாதாரம்,புரவலன் தாவரங்களை அகற்றுதல்,மஞ்சள் ஒட்டும் பொறிகளை நிறுவுதல்,கடுமையான தாக்குதலின் போது – இமிடாக்ளோபிரிட் 200SL 0.01% அல்லது ட்ரைஅசோபோஸ் 40EC 0.06%,வேப்ப எண்ணெய் 3% அல்லது NSKE 5% தெளிக்கவும்.

மேற்கண்ட மேலாண்மை முறைகளை எடுத்துரைத்த பின்னர்,அவர் மஞ்சள் ஒட்டுப்பொறி,மைதா கரைசல்,என்கார்சியா ஒட்டுண்ணிகள்  மற்றும் கிரைசோபிட் இறைவிழுங்கிகள் பற்றிய விரிவான செயல்முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

மேலும் படிக்க: ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் இதை வாங்க மறக்காதீங்க.. மாவட்ட ஆட்சியர் தகவல்

மேலும் மாணவர் ஹரிமாதவ், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்கவும் மற்றும் அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பற்றியும் விளக்கினார். முடிவாக வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை முறைகள் பற்றிய செயல்முறை துண்டுப்பிரசுங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

மேலும் காண்க:

ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் இதை வாங்க மறக்காதீங்க.. மாவட்ட ஆட்சியர் தகவல்

இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

English Summary: Don't overuse pesticides for Agriculture student explains whitefly control Published on: 17 March 2023, 10:47 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.