1. செய்திகள்

பேருந்துகளில் இ-டிக்கெட்: விரைவில் அறிமுகம்!

R. Balakrishnan
R. Balakrishnan

e-ticket on buses

நடப்பாண்டு இறுதிக்குள் பேருந்தில் பயண டிக்கெட் முறைக்கு மாறாக, இ-டிக்கெட் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார்.

ஸ்மார்ட் கார்டு (Smart Card)

பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தப்படும். அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையைப் பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம். பள்ளி வாகனங்களில் முன்னும் பின்னும் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் முழுமையாகக் கண்காணிக்கப்படும்.

இ-டிக்கெட் (e-ticket)

இந்த ஆண்டு இறுதிக்குள் பேருந்தில் பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ-டிக்கெட் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படும். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், கூகுள் பே, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்க தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: அமைச்சர் அறிவிப்பு.!

English Summary: E-Tickets on Buses: Introducing Coming Soon!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.