1. செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Harishanker R P
Harishanker R P

தஞ்சாவூர் அடுத்த காராமணிதோப்பு பகுதியில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

நெல் மட்டுமின்றி கரும்பு, உளுந்து, எள், மக்காச்சோளம், நிலக்கடலை, வாழை, வெற்றிலை, கீரை, காய்கறிகள் சாகுபடியிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்

தஞ்சாவூர் பகுதியில் நிலக்கடலை மார்கழி, சித்திரை என 2 பட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகி றது. நாட்டுக்கடலை, குஜராத் நாட்டுக்கடலை, ஆந்திரா நிலக்கடலை, உள்ளிட்ட பல ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மார்கழி பட்டத்தில் விதைத்த நிலக்கடலைகளை அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி, சூரக்கோட்டை, மடிகை, காட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து விவசாயி முருகேசன் கூறுகையில், மழையின் காரணமாககட ந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிலக்கடலை விளை ச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆள் பற்றாக்குறைகார ணமாக ஆட்கள் மூலம் அறு வடை செய்து இயந்திரங்களை பயன்படுத்தி நிலக்கடலையை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு ஏக்கர் நிலக்கடலையை இயந்திரம் மூலம் பிரித்தெடுக்க ரூ.3,600 முதல் ரூ.4000 வரை செலவாகிறது

நிலக்கடலை மூலம் கிடைக்கும் கடலை எண்ணெய், கடலை புண்ணாக்கு உள்ளி ட்டவைகளின் விலைகள் அதிகரித்து உள்ள போதிலும், உற்பத்தி செய்கின்ற விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை.இந்த ஆண்டு 80 கிலோ மூட்டை ரூ.7,600 முதல் ரூ.8,000 வரை விவசாயிகளிடம் இருந்து நிலக்கடலைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இது கடந்த ஆண்டை விட விலை குறைவு. உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் லாபமும் மிக, மிக குறைவாக காணப்படும் நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்று, வரும் காலங்களில் ஆண்டுதோறும் நிலக்கடலைக்கும் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர்.

Related links:

வேளாண்மைத் துறையில் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல்

கோடை மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் மிளகாய் வத்தல் விவசாயம் பாதிப்பு

English Summary: Farmers interested in groundnut cultivation in Thanjavur district Published on: 09 April 2025, 05:49 IST

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub