1. செய்திகள்

2 மாதங்களுக்கு முன்பு இறந்தவருக்கு - கொரோனாத் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
For those who died 2 months ago - Certificate of Coronary Vaccination!

Credit : The Hindu

2 மாதங்களுக்கு முன்பு இறந்து போன தொழிலாளியின் செல்போனுக்கு கொரோனா 2- வது தவணைத் தடுப்பூசி சான்றிதழ் வந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி முகாம் (Vaccination camp)

தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடி செக்கடி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 62). கூலித் தொழிலாளி. இவர்  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணையை கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ந்தேதி புளியங்குடியில் நடைபெற்ற முகாமில் போட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் மரணம்

இந்நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மாரியப்பன் கடந்த அக்டோபர் மாதம் 8-ந்தேதி புளியங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் கிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.

இறப்பு சான்றிதழ் (Death certificate)

இதைத்தொடர்ந்து அவரது மகன் மாரிசெல்வம் நகராட்சி அலுவலகத்தில் தனது தந்தையின் இறப்பை பதிவு செய்து இறப்பு சான்றிதழும் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது, அவரது மொபைலுக்கு, இறந்து போன அவரது தந்தை மாரியப்பன் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனைப்பார்த்து மாரிச்செல்வம் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

குறுஞ்செய்தி (SMS)

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்து வரும் வேளையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குறுஞ்செய்தி அவர்களுடைய செல்போனுக்கு வரும். ஆனால் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி செலுத்தி 2 மாதங்கள் ஆனாலும் குறுந்தகவல் வருவதில்லை என பொதுமக்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் இறந்து 2 மாதங்களுக்கு பின்னர் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதேபோல் பல பகுதியில் குளறுபடிகள் இருந்து வரும் நிலையில், புளியங்குடியில் மட்டும் கொரோனா தடுப்பூசி போட ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது.

போலிக் கணக்கு (Fake account)

ஒருபுறம், அரசு பல கோடி ரூபாய் செலவழித்து தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறது. ஆனால் மறுபுறமோ, தடுப்பூசிகளைப் போடாமலேயேப் போட்டதாக சுகாதாரத்துறையினர் கணக்கு காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.

இந்தக் குளறுபடிகள் முற்றிலும் ஏற்படாமல், இருக்க வேண்டுமோனால், அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

மேலும் படிக்க...

புதிய வகை வைரஸ் பரவல்: கவனமாக இருங்கள்! அரசு அறிவுரை!

ஒமைக்ரானால் இதுவரை உயிரிழப்பு இல்லை: WHO ஆறுதல் தகவல்!

English Summary: For those who died 2 months ago - Certificate of Coronary Vaccination!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.