1. செய்திகள்

அதிரடியாக தங்கம் விலை குறைவு!

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
GOLD PRICE DECREASED

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக யாரும் எதிர்ப்பாராத வகையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் அதிகமாகவே உள்ளது. ஆனால் கடந்த ஒருவாரமாக யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தும், குறைந்தும் வந்தது. இதனால் பொதுமக்கள்/ நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 வரை விலை குறைந்துள்ளது. இந்த விலை இறக்கம் பொதுமக்களிடையே தங்கத்தில் முதலீடு செய்ய சிறிது நம்பிக்கையினை வழங்கியுள்ளது.

சவரனுக்கு ரூ.320 குறைவு:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 44,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,565-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக திகழ்கிறது. மேற்குறிப்பிட்ட விலை சென்னையின் சந்தை நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)

வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.

மேலும் படிக்க

கரண்ட் பில் எடுக்க யாரும் வரமாட்டாங்க- ஸ்மார்ட் மீட்டர் குறித்து அமைச்சர்!

மோடியின் 9 வருட ஆட்சியில் விவசாயிகளுக்காக உருவாக்கிய 9 திட்டங்கள்!

English Summary: GOLD PRICE DECREASED Published on: 08 June 2023, 12:43 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.