1. செய்திகள்

ரூ.13,966 கோடியில் விவசாயிகளுக்காக 7 திட்டங்கள்- அமைச்சரவை ஒப்புதல்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
pic : pexels (EqualStock IN)

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு வேளாண் சார்ந்த 7 முக்கிய திட்டங்களுக்கு ரூ.13,966 கோடி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமாக பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், வேளாண் மற்றும் உழவர் நலன் துறை சார்ந்த அமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் பொறுப்பேற்றது முதல் கூடுதல் கவனம் வேளாண் துறை மீது செலுத்தப்பட்டு வருகிறது.

7 திட்டங்கள் என்ன?

இந்நிலையில், டிஜிட்டல் விவசாயம், பயிர் அறிவியல், வேளாண் சார்ந்த கல்வி, கால்நடை சுகாதாரம், தோட்டக்கலை மேம்பாடு, வேளாண் அறிவியல் மையங்களை வலுப்படுத்துதல் மற்றும் இயற்கை வள மேலாண்மை தொடர்பான ஏழு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் மொத்தம் ரூ.13,966 கோடி செலவில் ஏழு திட்டங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-

டிஜிட்டல் வேளாண்மை பணி: டிஜிட்டல் தொழில்நுட்பம் பெருகி வரும் சூழ்நிலையில், விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடுகளை உட்புகுத்தி விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் வேளாண்மை மிஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான மொத்த செலவினம் ரூபாய் 2,817 கோடி ஆகும்.

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான பயிர் அறிவியல்:  இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.3,979 கோடி என நிர்ணயிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பருவநிலைக்கு ஏற்றவாறு விவசாயிகளை தயார்படுத்தி 2047-க்குள் தன்னிறைவு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியலை வலுப்படுத்துதல்: மொத்தம் ரூ.2,291 கோடி செலவில், வேளாண் படிப்பு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை தற்போதைய வேளாண் துறை சார்ந்த சவால்களுக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது.

நிலையான கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி: இத்திட்டமானது மொத்தம் ரூ.1,702 கோடி செலவில், கால்நடைகள் மற்றும் பால்பண்ணை மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தோட்டக்கலைத் துறையின் நிலையான வளர்ச்சி: இத்திட்டமானது மொத்தம் 860 கோடி ரூபாய் செலவில், தோட்டக்கலை செயல்பாடுகளின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.

வேளாண் அறிவியல் மையங்களை வலுப்படுத்துதல்: விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் அவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டறிவதில் வேளாண் அறிவியல் மையங்களின் பணி அளப்பரியது. அந்த வகையில் தொழில் நுட்ப ரீதியாக நாட்டிலுள்ள வேளாண் அறிவியல் மையங்களை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.1,202 கோடி செலவீடு மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இயற்கை வள மேலாண்மை: ரூ.1,115 கோடி செலவில் இயற்கை வள மேலாண்மை தொடர்பான பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Read more:

உயிர் உரங்களை எப்படி சரியாக பயன்படுத்துவது?

இயற்கையின் அற்புத கொடை "பூஞ்சைகள்” - ஏன் தெரியுமா?

English Summary: Good news Cabinet approves 7 projects for farmers at Rs 13966 crore Published on: 03 September 2024, 04:11 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.