1. செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: இனி இவர்களுக்கு முழு சம்பளம் தான்!

R. Balakrishnan
R. Balakrishnan

Government employees

அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி வந்துள்ளது. தகுதி காண் கால விதிகளை அரசு மாற்றியுள்ளது. புதிய விதியின் கீழ் ஊழியர்கள் தங்கள் முழு சம்பளத்தையும் பெறுவார்கள். உண்மையில், மத்தியபிரதேச அரசு ஊழியர்களுக்காக ஒரு குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துள்ளது.

அரசு ஊழியர்கள் (Government Employees)

மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தகுதிகாண் காலம் தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது. இதன் விளைவாக, புதிதாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு இனி முழு சம்பளம் கிடைக்கும். தகுதிகாண் காலம் என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியாகும், அதன் பிறகு ஒரு ஊழியர் தனது முழு சம்பளத்தைப் பெறுகிறார்.

உதாரணமாக, ஒரு பணியாளரின் தகுதிகாண் காலம் இரண்டு ஆண்டுகள் என்றால், அவர் பணியமர்த்தப்பட்ட உடனேயே அவர் சம்பளத்தைப் பெறத் தொடங்குவார், ஆனால் அவரது தகுதிகாண் காலம் முடியும் வரை அவருக்கு முழு சம்பளமும் கிடைக்காது.

அதாவது, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பணியாளரின் முழு சம்பளத்தையும் அரசாங்கம் வழங்கும். அரசின் இந்த முடிவு ஊழியர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

ஒரு ஊழியரின் சம்பளம் ரூ.40,000 மற்றும் அவரது தகுதிகாண் காலம் நான்கு ஆண்டுகள் எனில், முதல் ஆண்டில் ரூ.28,000, இரண்டாம் ஆண்டில் ரூ.32,000, மூன்றாம் ஆண்டில் ரூ.36,000, நான்காம் ஆண்டில் ரூ.40,000 பெறுவார்.

மேலும் படிக்க

உயரப் போகுது டோல் கட்டணம்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

இவர்களுக்கு மட்டும் 100 Unit இலவச மின்சார திட்டம் தொடரும்: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

English Summary: Good news for government employees: Now they get full salary!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.