1. செய்திகள்

ரூ.39 கோடி ஒதுக்கீட்டில் 1.77 கோடி மரக்கன்றுகள் நட தமிழக அரசு முடிவு!

R. Balakrishnan
R. Balakrishnan

Plant Saplings in Tamilnadu

தமிழகத்தில் தற்போதைய வனப்பரப்பு (Forest Area) 23.8 சதவீதமாக உள்ளது. அதை 33 சதவீதமாக உயர்த்த பட்ஜெட்டில் அறிவித்தபடி, தமிழ்நாடு பசுமை இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், உள்நாட்டு மரக்கன்றுகளை, நகர்ப்புறங்களில் உள்ள அரசு நிலங்கள், பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோவில் நிலங்கள், தொழிற்பகுதிகள், படுகை பகுதிகளில் நட முடிவு செய்யப்பட்டது.

உள்நாட்டு மரக்கன்றுகள் (Saplings)

நடப்பாண்டு முதல் 2030 - 31ம் ஆண்டுக்குள், வனப்பரப்பை அதிகரிக்க, 265 கோடி உள்நாட்டு மரக்கன்றுகளை, பொது இடங்களில் நட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு 12 ஆயிரத்து 350 ஏக்கர் நிலப்பரப்பில், 47 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

மரக்கன்றுகளை உருவாக்கவும், அவற்றை நடவும் 21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில், 12 ஆயிரத்து 350 ஏக்கர் நிலப்பரப்பில், 1.30 கோடி மரக்கன்றுகள் நட 17.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பசுமையாகும் தமிழகம் (Green Tamilnadu)

மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு பராமரித்து வருவதன் மூலம், தமிழகம் முழுவதும் பசுமையாக காட்சியளிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். ஆர்வமுள்ள இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் இத்திட்டத்தில் இணைந்து மரக்கன்றுகளை நட வேண்டும். வனப்பரப்பை அதிகரிக்க முடிவு செய்தது நல்திட்டமாக கருதப்படுகிறது. விரைவாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு மரக்கன்றுகள் பசுமையாக காட்சியளிக்க வேண்டும்.

மேலும் படிக்க

விவசாயிகளை அச்சுறுத்தும் ஆப்பிரிக்க நத்தைகளை எப்படி கட்டுப்படுத்தலாம்?

மாடித் தோட்டம் அமைக்க மானிய விலையில் செடி, விதைகள்! தொடங்கி வைத்தார் முதல்வர்!

English Summary: Government of Tamil Nadu decides to plant 1.77 crore saplings with an allocation of Rs. 39 crore!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.