Heavy Collection at Thiruthani Murugan Temple..
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 28 நாட்களில் 1 கோடியே 11 லட்சத்து 23 ஆயிரத்து 430 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாவதாக அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.இந்த முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அதே போல் கிறிஸ்துமஸ் தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வருகின்றனர். முருகனை தரிசித்து தர்ப்பணம் செய்கின்றனர். கோவிலில் பூஜைக்கு நேர்த்திக்கடன் செலுத்துபவர்களும் உண்டு.
இதனையடுத்து திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம், தமிழக அரசின் கொரோனோ வைரஸ் வழிகாட்டுதலின்படி திருக்கோயில் மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் சமூக இடைவெளியுடன் கோயில் ஊழியர்கள், உண்டியல் என்னும் இடத்தில் பணி நடைபெற்றது.
அதன்படி கடந்த 28 நாட்களில் ஒரு கோடியே 11 லட்சத்து 23 ஆயிரத்து 430 ரூபாய் பணமும், 910 கிராம் தங்கம், 12 ஆயிரத்து 503 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் மலைக்கோயில் வசந்த மண்டபத்தில், திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி, ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
ஆகியவை உண்டியல் காணிக்கையாக 31 நாட்களில் கிடைக்கப்பெற்றது என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க:
சுவாமி மலையில் 'லிப்ட்' வசதி சட்டமன்றத்தில் முறையிட்டார் ஜவாஹிருல்லா!
மருதமலை முருகன் கோவில் - இந்து அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!
Share your comments