தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 21 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 5 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குச் சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும்
அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாகச் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் (Chennai metrological Department) தெரிவித்துள்ளது.
கன மழைக்கு வாய்ப்பு
மேலும் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் (Heavy Rain) பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (Low Depression) வரும் அக்டோபர் 9-ஆம் தேதி, அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் உருவாகக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை
-
அக்டோபர் 9ம் தேதி அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
அக்டோபர் 10ம் தேதி அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
அக்டோபர் 11 மற்றும் 12ம் தேதிகளில் மத்திய கிழக்கு மற்றும் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் வரும் 8ம் தேதிக்குள் கரை திரும்புமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
PM Kisan Update : ரூ.2000 பணம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லையா? உடனடியாக சரிபாருங்கள்!
அதிக மகசூல் அள்ளித்தரும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை! - விவசாயிகள் ஆர்வம்!
மீனவர்களுக்கும் கிசான் கிரெடிட் கார்டு மூலம் கடன்! - திட்டத்தை துவங்கியது இந்தியன் வங்கி!
Share your comments