1. செய்திகள்

Millet shakti Festival- இந்திரபிரசாதா மகளிர் பல்கலைக்கழகத்தில் தினை திருவிழா!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Millet shakti Festival

டெல்லியில் அமைந்துள்ள இந்திரபிரசாதா மகளிர் பல்கலைக்கழகத்தில் தினை சாகுபடியினை ஊக்குவிக்கவும், தினையில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு முறைகளையும், அவற்றினை சந்தைப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கும் வகையில் “Millet shakti Festival" நடைப்பெற்றது.

தினை உற்பத்தியில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. எதிர்பாராத காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் உணவுத் தேவை இவற்றுக்கான தீர்வாக தினை பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டினை சர்வதேச தினை ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, இந்திய அரசும் 2023 ஆம் ஆண்டில் தினை சாகுபடி, தினை உணவு வகை குறித்து பொதுமக்களிடையே பெருமளவில் விழிப்புணர்வினை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

Millet shakti Festival:

தினை குறித்த விழிப்புணர்வின் ஒரு பகுதியாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திரபிரசாதா மகளிர் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் (08-05-2024) “Millet shakti Festival" ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தின் முதல்வர் பூனம் கும்ரியா, Dr.வேல்முருகன் (ICAR ADG), செல்லையா (Director Horticulture Archaeological Survey of India), சாலை வடமலை (uzhavan’s kukky) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று நிகழ்வினை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் திரளான மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

கல்லூரி நூற்றாண்டு நிகழ்வின் ஒருபகுதி:

நிகழ்வு குறித்து இந்திரபிரசாதா மகளிர் பல்கலைக்கழகத்தின் முதல்வர் பூனம் கும்ரியா கூறுகையில், ”எங்கள் கல்லூரி நூற்றாண்டு நிகழ்வினை கொண்டாடி வருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக “Millet shakti Festival” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்விற்கு தினை எந்தளவிற்கு முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இன்றைய தலைமுறையினர் ஆரோக்கியமான உணவு முறைகளை கடைபிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்."

"இப்படியான தருணத்தில் தினை குறித்தும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் கல்லூரி மாணவிகள், சிறு-குறு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Dr.வேல்முருகன் (ICAR-ADG) பேசுகையில்,” இந்த நிகழ்விற்கு வருகை தந்தது மிக்க மகிழ்ச்சி. சிறுதானியங்கள் நமது கலச்சாரத்தின் ஒரு பகுதி தான். இருந்தாலும், தற்போது சமூகத்தில் பெரியளவில் தினை குறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக விவசாயிகள் தினை சாகுபடியை நல்ல முறையில் பயன்படுத்தி லாபம் பார்க்கலாம். விவசாயிகள் மாற்றுப்பயிராக தினையினை தேர்வு செய்யும் போது, அங்கக வேளாண்மை, நீர் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, நோய் மேலாண்மை போன்ற தொழில்நுட்ப விஷயங்களில் முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டு அவற்றில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபடும் போது நிச்சயம் விவசாயிகள் லாபத்தோடு வெற்றி அடையலாம்” என தனது கருத்தினை தெரிவித்தார்.

ஒரே மாதிரியான உணவு- உடலுக்கு கேடு:

செல்லையா (Director Horticulture Archaeological Survey of India) நிகழ்வு குறித்து பேசுகையில், “ தினை சார்ந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள கல்லூரி நிர்வாகத்திற்கும், இதனை நல்ல முறையில் நடத்திவருகிற களப்பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். கிராமங்கள், நகர்ப்புறத்தில் வசிக்கும் என அனைத்து விதமான மக்களும் சிறுதானிய உணவு வகைகளின் மீது ஆர்வம் காட்டுகின்றனர். விவசாயிகளும் மாற்றுப்பயிராக தினை விவசாயத்தை மேற்கொள்ளலாம். ஒரே மாதிரியான பயிர், ஒரே மாதிரியான செயற்கை உரம் பயன்படுத்தினால் உங்கள் நிலம் கெட்டுப்போய் விடும். அதேப்போல் தான் ஒரே மாதிரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டு வந்தால் உங்கள் ஆரோக்கியமும் கெட்டுப் போகும். வருங்காலங்களில் தினையிலான மதிப்பு கூட்டுப் பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை” எனவும் தெரிவித்தார்.

Read also: மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்?

ஆரோக்கியமான உணவு- அதுவே நோக்கம்:

நிகழ்வு ஏற்பட்டாளர்களுள் ஒருவரான சாலை வடமலை பேசுகையில், ”புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளிடம் நாங்கள் பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய விதைகளை அளித்து அறுவடை செய்து அதில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து வருகிறோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு ஸ்நாக்ஸ், கூக்கிஸ் போன்ற தயாரிப்புகளில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறோம். எங்களது முக்கிய நோக்கம், பாரம்பரிய அரிசி மற்றும் தினை வகை மூலம் ஆரோக்கியமான உணவினை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான். அதன் ஒரு பகுதியாக, Millet shakti Festival-ல் எங்களது உணவு வகைகளையும், ஸ்நாக்ஸ் தயாரிப்புகளையும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளோம். இந்த நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியினை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

uzhavan's kukky- value added products

Millet shakti Festival-ல் சுருள்பாசியில் (ஸ்பைருலீனா) மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், தினையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவை நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. தினையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும் நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:

சித்திரை பட்டத்திற்கேற்ற எள் இரகங்கள் என்ன? எது கைக்கொடுக்கும்?

உதிரும் இலைச் சருகுகளை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?

English Summary: Highlights of the Millet shakti Festival at Indraprastha College for Women Published on: 09 May 2024, 11:43 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.