1. செய்திகள்

குழந்தைக்காக கோமியம் கொடுத்துச் சித்ரவதை- கணவருக்கு 7 ஆண்டு சிறை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Husband jailed for 7 years for torturing child

குழந்தை பாக்கியத்திற்காக மாட்டின் கோமியத்தைக் குடிக்கவைத்துத் தன் மனைவியைச் சித்ரவதை செய்த கணவருக்கு, நீதிமன்றம் 7 ஆண்டுத் சிறைத்தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர் மரியானோ ஆண்டோ புருனோவுக்கும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை மருத்துவர் அமலி விக்டோரியாவுக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. அயனாவரம் பகுதியில் வசித்து வந்த இவர்களுக்கு, ஒன்றரை ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், மாமனார், மாமியார் மற்றும் கணவர் ஆகியோர் அமலியை துன்புறுத்தியுள்ளனர்.

தற்கொலை

2007ம் ஆண்டு ஆண் குழந்தை பெற்றெடுத்த அமலி, பிரசவத்துக்குப் பின் கணவர் வீடு திரும்பியபோது, அவரை வீட்டு வேலைகளை செய்ய வற்புறுத்தியதுடன், அவரது பெயரில் உள்ள சொத்துகளை எழுதி வைக்க சொல்லியும் துன்புறுத்தி தாக்கி, சித்ரவதை செய்துள்ளனர்.இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அமலி, கடந்த 2014 நவம்பர் 5ம் தேதி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, மரியானோ ஆன்டோ புருனோ, அவரது தாய் அல்போன்சாள், தந்தை ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் அயனாவரம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, மருத்துவர் அமலியின் கணவர் மற்றும் மாமியார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும், இருவருக்கும் தலா ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மாமனார் ஜான் பிரிக்ஸ் விடுதலை செய்யப்பட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மரியானோ ஆன்டோ புருனோ, அவரது தாய் அல்போன்சாள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில், குழந்தை இல்லை என்பதற்காக வீட்டில் பூஜைகளை நடத்தி, அமலியை கோமியம் குடிக்க வற்புறுத்தியுள்ளதாகவும், அனைத்து ஆதாரங்களையும் போலீசார் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்வதாக கூறி, மேல் முறையீட்டு வழக்கை நீதிபதித் தள்ளுபடி செய்தார்.

மேலும் படிக்க...

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தொடர் விடுறையில் மாணவர்கள்- பள்ளிக்கல்வித்துறைக்கே tough !

English Summary: Husband jailed for 7 years for torturing child

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.