1. செய்திகள்

இஸ்ரேல் மற்றும் இந்திய அமைச்சர் திடீர் சந்திப்பு? எங்கு நடந்தது? எதற்கு நடத்தது?

Harishanker R P
Harishanker R P
Union Minister for Agriculture, Farmers’ Welfare and Rural Development Shivraj Singh Chouhan with Israel’s Minister of Agriculture and Food Security Avi Dicter during a high-level meeting in New Delhi. (Photo Source: @OfficeofSSC/X)

மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் இஸ்ரேல் வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவி டிக்டர் ஆகியோரின் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.

வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் உள்ள சர்வதேச விருந்தினர் மாளிகையில் மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் இஸ்ரேல் நாட்டின் வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவி டிக்டர் ஆகியோருக்கிடையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

இஸ்ரேலின் வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற முறையில் அவி டிக்டர் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் அரசுமுறைப் பயணத்தை இந்தக் கூட்டம் குறிக்கிறது. புதுதில்லியில் நேற்று நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தின்போது கையெழுத்தான வேளாண் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் செயல் திட்டம் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளும் தங்களது வேளாண் கூட்டணியை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்து வைத்துள்ளன.

மண் மற்றும் நீர் மேலாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் உற்பத்தி, அறுவடைக்குப் பிந்தைய மற்றும் பதப்படுத்தும் தொழில்நுட்பம், வேளாண் இயந்திரமயமாக்கல், கால்நடை பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தும்.

சர்வே பவந்து சுகினா, சர்வே சாந்து நிர்மாயா" அதாவது (அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும், அனைவரும் நோயிலிருந்து விடுபடட்டும்) மற்றும் "பர்ஹித் சாரிஸ் தர்ம நஹி பாய்" (மற்றவர்களுக்கு சேவை செய்வதை விட பெரிய மதம் எதுவும் இல்லை) ஆகிய கொள்கைகளை இந்தியா நம்புகிறது என்று சிவராஜ் சிங் சவுகான் எடுத்துரைத்தார். பிரதமர்  நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக உருவெடுத்து வருகிறது என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்திய-இஸ்ரேல் வேளாண் பணித் திட்டங்களின் வெற்றிக்கு, குறிப்பாக 43 சிறப்பு மையங்களின் வலையமைப்பு  மூலம் உருவாக்கப்பட்டதில் மாஷவ் அதாவது (இஸ்ரேலின் சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு நிறுவனம்)இன் பங்கை அவர் பாராட்டினார். ஒவ்வொரு சி.ஓ.இ உடனும் 30 கிராமங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்ட இஸ்ரேலின் "சிறப்பான கிராமங்கள் என்ற கருத்து, கிராமப்புறங்களை சென்றடைவதை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று அவர் குறிப்பிட்டார். உலக உணவு இந்தியா 2025-க்கான இஸ்ரேல் தூதுக்குழுவுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்

இஸ்ரேலும் இந்தியாவும் ஆழமான உறவைப் பகிர்ந்து கொள்வதாகவும், மற்ற துறைகளில் அதிக மகசூல் தரும் விதை வகைகள் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடியும் என்றும் இஸ்ரேலின் வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அவி டிக்டர் குறிப்பிட்டார். காலநிலை மாற்றத்தின் சவால்களைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய விவசாயத் துறையில் புத்தாக்கம் தேவை என்றும் அவர் கூறினார்.

Read more:

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் ஏப்.14 வரை மழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

English Summary: India, Israel Deepen Agricultural Ties with New Agreements Focused on Seeds, Technology and Sustainability Published on: 10 April 2025, 01:58 IST

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.