1. செய்திகள்

தமிழ்நாடு வேளாண்மை துறை மூலம் தரமற்ற விதை- 90% மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிப்பு

Harishanker R P
Harishanker R P
A farmer sowing seeds (Representational image) Pic credit - Pexels

திருச்சி மாவட்டம் முழுமைக்கும் 14 பிளாக்கில் F1 விதை உளுந்து ரகம் வம்பன் 8 வம்பன் 10 விவசாயிகளுக்கு தை பட்டத்தில் பயிர் செய்ய வேளாண் விரிவாக்க மையம் மூலம் வினியோகம் செய்யப்பட்டது.

வம்பன் ரகம் புதுக்கோட்டை வம்பன் ஆராய்ச்சி மையம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ரகம்.இந்த ரகம் பெரும்பாலும் மானாவாரி விவசாய உற்பத்திக்கு உகந்த செம்மண் மற்றும் சரளை மண் போன்ற விவசாய பகுதியில் சாகுபடிக்கு உகந்தது.களிமண் மணல் வண்டல் மண் போன்ற பகுதியில் விதைக்க உகந்த ரகம் கிடையாது.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 75 டன் விதை 14 பிளாக்கில் விநியோகிக்கப்பட்டுள்ளது. மணிகண்டம் பிளாக்கில் 5 டன்னும் அல்லித்துறை வேளாண் மையம் மூலம் இரண்டரை டன், விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. அரசு வேளாண்மையம் மூலம் வம்பன் 8 வம்பன் 10 விதை பெற்று விவசாயம் செய்த 90 சதவீதம் விவசாய நிலப்பரப்பு மஞ்சள் தேமல் நோயால் பாதிக்கப்பட்டு தங்கள் மகசூல் வருவாயை இழந்துள்ளனர்.

இந்த நோய் வெள்ளை ஈ மூலம் பெருவாரியாக பரவுவதாக வேளாண்மை துறை அறிவித்துள்ளது. கிராம விவசாய கூட்டம்  விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிற்சி மூலம் தெரிவித்தும் கட்டுப்படுத்த சரியான மருந்தும் கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு கிலோ 80 ரூபாய் வீதம் வேளாண் விரிவாக்க மையத்தில் ஏக்கருக்கு 10 கிலோ விதை பெற்று உயிர் உரம் விதை நேர்த்தி செய்து விதைத்து பயிர் வளர்ந்து பூக்கும் தருணத்தில் மஞ்சள் தேமல் நோய் பாதிக்கப்பட்ட தங்கள் மகசூல் பாதிப்பை சந்தித்துள்ளனர்

ஒவ்வொரு பிளாக்கிலும் ஒரே  AD மற்றும் உதவி விதை அலுவலர் ASO மற்றும் SO மற்றும் AAO மற்றும் மூன்று வருவாய் கிராமத்திற்கு ஒரு ஏதோ வேளாண் அதிகாரிகள் அரசால் நியமிக்கப்பட்டும்.அந்தப் பகுதிக்கு தேர்வு செய்யப்பட்ட விதை தேர்வு செய்த செய்யப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் பார்வையிட்டு சரியான முறையில் விதை கொள்முதல் செய்திருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.விவசாய பகுதிக்கு உகந்த விதை தேர்வு பதிவு செய்தும் வழங்கவில்லை.வரும் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் உளுந்து விதை தேர்வு செய்து விவசாயிகளிடம் விதை கொள்முதல் செய்யாமல் மொத்தத்திற்கும் வம்பன் ரகத்தை தவிர்த்து ஆடுதுறை ஆராய்ச்சி மையம் அல்லது கோவை வேளாண் ஆராய்ச்சி மையம் மூலம் வெளியிடப்பட்ட புது ரகங்களை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டுகிறோம்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வருவாய்த்துறை, வேளாண்துறை, புள்ளியல் துறை, மூலம் சரியான பாதிப்பினை அளவீடு செய்து உரிய நிவாரணம் வழங்கவும் மேலும் உளுந்துக்கான இன்சூரன்ஸ் காப்பீடு செய்ய வரும் காலங்களில் அரசு போதிய நிதி ஒதுக்கி விவசாயிகளின் காப்பீடு வழிவகை செய்ய வேண்டுகிறோம்.

Read more: 

ஏரல் அருகே பெருங்குளம் கிராமத்தில் சின்னநாளி பாசனமடை கால்வாய் தூர்வாரும் பணி

உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் விறுவிறு

English Summary: Low-quality seeds: 90% yield loss causes impact on farmers. Published on: 25 March 2025, 04:39 IST

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.