1. செய்திகள்

ரசாயன கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம்

KJ Staff
KJ Staff

வேளாண்மைக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளால் உருவாகும் கழிவுநீரை நெற்பயிர்கள் சுத்தம் செய்வதாக அமெரிக்க விஞ்ஞானி கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வேளாண்மைக்காகப் பயன்படுத்தும் ரசாயன உரங்களால் வேளாண் நிலங்கள் பாதிப்படைவது குறித்தும் அவற்றை சுத்திகரிப்பது குறித்தும் நீண்ட நாட்களாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அதற்கான புதியத் தீர்வைக் கண்டுள்ளதாக அமெரிக்க வேளாண்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள அமெரிக்க அரசின் வேளாண்துறை மூத்த விஞ்ஞானி மேட் மூர் என்பவர் நெற்பயிர்கள் ரசாயனக் கழுவுகளை சுத்திகரிக்கும் தன்மை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: - ‘விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரை சுத்திகரித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இதர தாவரங்களுக்கு பாதிக்காத பயிர் எது என்ற ஆராய்ச்சியை நீண்டகாலமாக நடத்தி வருகிறோம். இப்போது அதற்கான விடையைக் கண்டுபிடித்துள்ளோம். நெற்பயிர் ரசாயனக் கழிவுகளை சுத்தப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது. பண்ணைகளில் இருந்து வெளியேறும் பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் கலந்த கழிவுநீர் ஆறு, ஏரிகளில் கலக்கிறது. இந்த கழிவுநீர் கால்வாய்களில் நெற்பயிர்களை வளர்த்தோம். வேறு சில கால்வாய்களில் இதர செடிகளை வளர்த்தோம். நான்கு பண்ணைகளில் சுமார் 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆய்வு நடத்தினோம். இதில் நெற்பயிர் வளர்க்கப்பட்ட கால்வாய்களில் 85 சதவீதம் முதல் 97 சதவீதம் வரை ரசாயன கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அமெரிக்க விவசாயிகள், தங்களது பண்ணைகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் நெற்பயிர்களை வளர்க்க அறிவுறுத்தியுள்ளோம். இந்த நெற்பயிரை உணவுக்காகவும் பயன்படுத்தலாம்’ என்று கூறினார்.

English Summary: New plant identified to treat chemical waste in field Published on: 13 December 2018, 02:50 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.