1. செய்திகள்

ஜனவரியில் உச்சமடையும் ஒமிக்ரான் அலை - அதிக மரணத்தை ஏற்படுத்தலாம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Omicron wave peaking in January could cause death-

Credit : Dailythanthi

ஜனவரி மாதம் ஒமிக்ரான் அலை வீசக்கூடும் என தொற்று நோய் நிபுணர் டாக்டர் நரேஷ் புரோகித் வெளியிட்டுள்ள தகவல் உச்சக்கட்ட அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கே உலக மக்கள் ஆடிப்போனதுடன், ஆயிரக்கணக்கானோரின் உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. இதன் ஆட்டம் இன்னும் முடிவுக்கு வருமுன்பே, ஒமிக்ரான் வைரஸ் அலற வைத்து இருப்பதான், மானுட சோகம்தான்.

உருமாற்றம் (Transformation)

கடந்த 24-ந் தேதி முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில்தான் இந்த ஒமிக்ரான் தென்படத்தொடங்கியது. இது 50-க்கும் மேற்பட்ட உரு மாற்றங்களை கொண்டிருக்கிறது, அதிபயங்கரமானது.

70 மடங்கு வேகம் (70 times the speed)

உடனடியாக , ஜெனீவாவில் கூடி இந்த வைரஸ் பற்றி விவாதித்த உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு, 26-ந் தேதியே இந்த வைரஸ், கவலைக்குரிய திரிபாக (VOC) அறிவித்தது. இந்த ஒமிக்ரான், டெல்டா வைரசுடன் ஒப்பிடுகிறபோது 70 மடங்கு வேகத்தில் பரவும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. இதையடுத்து,உலகமெங்கும் ஒமிக்ரான் வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

இந்நிலையில் கேரளாவில் ஒமிக்ரான் பரவலை தடுக்கும் உத்திகள் பற்றி இணைய வழியில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பிரபல தொற்றுநோய் நிபுணரும், தேசிய தொற்றுநோய்கள் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகருமான டாக்டர் நரேஷ் புரோகித் கூறியதாவது:-

அதிர்ச்சித்தகவல்கள் (Shocking information)

  • ஒமிக்ரான் பரவலின் வேகம், டெல்டாவை விட அதிகம்.

  • டிசம்பர் 2-ந் தேதி இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு 2 பேருக்கு மட்டுமே இருந்தது. டிசம்பர் 14-ந் தேதி 45 பேருக்கு பாதிப்பு. 16-ந் தேதி 77 பேருக்கு பாதிப்பு. ஆக, 14 நாளில் 36 மடங்காக பெருகி உள்ளன.

  • ஜனவரியில் ஒமிக்ரான் அலை வீசக்கூடும்.

  • ஒமிக்ரான் நோயாளி சூப்பர் ஸ்பிரடர் ஆக மாறி, ஒமிக்ரானை வேகமாகப் பரப்பலாம்.

  • ஒமிக்ரான் ஏற்கனவே 77 நாடுகளுக்கு பயணித்திருக்கிறது. அதுவும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 3 வாரத்தில் இது நடந்திருக்கிறது.

  • ஒமிக்ரான் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும்கூட, காட்டுத்தீ போல பரவுவது, உலகமெங்கும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு பெருத்த சவாலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.

  • யாரும் ஒமிக்ரானை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

  • இன்னும் ஏராளமானவர்களை தொற்றுவதின் மூலம் மிகக்கொடிய நோயாக மாறலாம், மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

தடுப்பூசி (Vaccine)

ஒமிக்ரான் வைரஸ், கடந்த கால நோய்த்தொற்றின் மூலம் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தி மற்றும் தடுப்பூசியால் கிடைத்த நோய்த்தொற்றுகளில் இருந்து தப்பிக்க முடியும். இதனால் ஒமிக்ரான் திரிபின் ஒட்டுமொத்த அச்சுறுத்தல் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் படிக்க...

கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்!

ஒமிக்ரான் பாதிப்பால் இங்கிலாந்தில் முதல் உயிரிழப்பு!

English Summary: Omicron wave peaking in January could cause death-

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.