1. செய்திகள்

PM கிசான் 13வது தவணை; ஆன்லைனில் பெயரை சரிபாருங்கள்

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
PM Kisan 13th Term; Check name online

அனைத்து PM கிசான் பயனாளிகளும் 13வது தவணையைப் பெற, அவர்களின் கணக்கு eKYC இணக்கத்தை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகும். eKYC ஐ முடிப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி 10, 2023 என்று முன்பே தெரிவிக்கப்பட்டியிருந்தது.

இதன் படி தற்போது, தற்போது பயனாளர்களின் பட்டியலில் பெயரை சரிபார்க்க விவசாயிகள் செய்ய வேண்டியது.

1. அதிகாரப்பூர்வ PM KISAN இணையதளத்தைப் பார்வையிடவும் https://pmkisan.gov.in/.

2. இந்தியாவின் வரைபடத்தின் மேலே உள்ள மஞ்சள் நிற தாவலான "டாஷ்போர்டு"க்கு செல்லவும். ஒரு புதிய பக்கம் திறக்கும்.

3. அந்தந்த மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும். காண்பி பொத்தானைக் கிளிக் செய்யவும். பட்டியல் திறக்கும் இந்த பட்டியலில் உங்கள் பெயரை சரிபார்க்கலாம்.

2.விதைப்பண்ணை அமைக்க இதோ அரசின் மானியம்

ஒரு விவசாயக் குடும்பத்திற்கு அதிகபட்சமாக நெல்லில் 5 ஏக்கரும் இதர பயிர் விதைகளில் 12.5 ஏக்கரும் விதைப்பண்ணையாக பதிவு செய்யலாம். விதை உற்பத்தி செய்து சுத்திகரிப்பு நிலையத்தில் இருப்பு வைத்தவுடன் குறைந்த பட்ச ஆதார விலையில் 80% முதல் தவணை நேரடியாக விவசாயிகளின் வங்கிகணக்கில் வழங்கப்படும். மீதமுள்ள தொகை டான்சிடா கொள்முதல் விலையின் படி இரண்டாம் தவணை சுத்திகரிப்பு முடிந்து விதை ஆய்வு முடிவில் தேர்ச்சி பெற்றவுடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகுங்கள்.

3.சென்னையில் உள்ள நியாய விலைக் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC), உணவுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து, சென்னையில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம், முன்னுரிமை குடும்பம் (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) கார்டுதாரர்களுக்கு, செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தைத் தொடங்கவுள்ளது. குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நாள்பட்ட இரத்த சோகையை எதிர்த்துப் போராடுவதற்கு முன்முயற்சி எடுக்கப்பட்டது. மேலும் அரிசியின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் அதை சமைக்கும் முறை குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இத்துறை ஏற்பாடு செய்துள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, வலுவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் பி 12 போன்ற வைட்டமின்கள் உள்ளன, அவை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமானவை. சென்னையில் 7.50 லட்சம் PHH மற்றும் AAY கார்டுதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

4.TNAU: சிறுதானியத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி

சிறுதானியத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் குறித்த பயிற்சியை TNAU நடத்துகிறது, “சிறுதானியத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்” என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பயிற்சி கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 22பிப்ரவரி மற்றும் 23பிப்ரவரி 2023ஆகிய தேதிகளில் நடத்தப்படும். ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கு சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அச்சிறப்பு மிக்க இந்த உணவு நம் அன்றாட உணவில் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. சிறுதானியங்கள் அதிக சத்தானது மற்றும் இதன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இந்த பயிற்சியின் மூலம் தொழில்முனைவோருக்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும். பயிற்சித் திட்டத்தில் பின்வருவன இடம்பெறும்:

  • பாரம்பரிய உணவுகள்
  • பாஸ்தா உணவுகள்
  • பேக்கரி பொருட்கள்
  • உடனடி உணவு கலவைகள்

ஆர்வமுள்ள நபர்கள் ரூ.1,770/- (1500/+ GST 18%) - பயிற்சியின் முதல் நாள் நேரில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


5. புதிய நெல் ரகங்கள் உள்பட 23 புதிய பயிா் ரகங்களை

அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் 4 புதிய நெல் ரகங்கள் உள்பட வேளாண்மை, தோட்டக்கலை, மரப்பயிா்கள் என 23 புதிய பயிா் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 வேளாண் பயிா்கள், 3 தோட்டக்கலை பயிா்கள், 4 மரப்பயிா்கள் என 23 புதிய பயிா் ரகங்களை துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி அறிமுகப்படுத்தினாா். மேலும், 10 புதிய தொழில்நுட்பங்கள், 6 பண்ணை இயந்திரங்களையும் புதிய பயிா் ரக விதைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

6. ரூ. 4.2 கோடியில் நுகா்பொருள் வாணிபக் கிடங்கு அமைக்கும் பணி தீவிரம்!

போ்ணாம்பட்டு வட்டத்தில் ஒரு ஏக்கா் பரப்பளவில் ரூ. 4.2 கோடியில், சுமாா் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கு அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்ற சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். இதையொட்டி, பக்காலப்பல்லி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ அமலுவிஜயன் குத்து விளக்கேற்றி, பூஜை செய்தாா். கோட்டாட்சியா் எம்.வெங்கட்ராமன், போ்ணாம்பட்டு வட்டாட்சியா் நெடுமாறன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கின் கண்காணிப்பாளா் சற்குணம், துணை வட்டாட்சியா் பலராமன், உதவிப் பொறியாளா் பூவரசன், ஒன்றிய திமுக செயலா் டேவிட், சின்னதாமல் செருவு ஊராட்சி தலைவா் ராஜமாணிக்கம், ஒன்றியக் குழு உறுப்பினா் குமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

7. அரசு அறிவித்த இழப்பீடு போதாது டெல்டா விவசாயிகள் கவலை!

டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிப் பெய்த கனமழையால், பெரும் இழப்பைச் சந்தித்திருக்கும் விவசாயிகள், ‘‘பாதிப்புகள் குறித்து முறையாகக் கணக்கெடுப்பு நடத்தவில்லை. முதல்வர் அறிவித்த இழப்பீடு போதாது’’ என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள சங்க்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கூறுகையில், 'தஞ்ச்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழை பெய்ததால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் நாசமியுள்ளன. இந்நிலையில் ஒரு ஏக்கருக்கு 35000 இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

8. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை பிப்.28 ஆம் தேதி வரை நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மின்சார மானியம் பெறுபவர்கள் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி தமிழகத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வந்ததுடன் மக்களுக்கு ஆதாரை இணைப்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வந்தன. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணியை தமிழக மின் வாரியம், கடந்த 2021 ஆம் ஆண்டு நவ.15 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை பிப்.28 ஆம் தேதி வரை நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

9. விவசாயக் கடன் தள்ளுபடி! அரசின் முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் கடலூர் சாலையில் உள்ள AFT மைதானத்தில் வேளாண் விழா-2023 மற்றும் 33-வது மலர், காய், கனிக்காட்சி கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை அரசு தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

10. தமிழகத்தில் இலவச திருமணத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ் நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற மார்ச் 3-ஆம் நாள் சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணத்தைத் துறைமுகம் தொகுதியில் நடத்த இருக்கிறார். விருப்பமுள்ள மணமக்கள் உரிய சான்றிதழ்களுடன் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். இந்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த விருப்பமுள்ள மணமக்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 9840115857 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

11. பட்ஜெட் 2023 எதிரொலி: தமிழக விவசாயிகள் போராட்டம்!

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழக விவசாய சங்கத்தினர், போராட்டம் நடத்திய நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். மத்திய அரசின், இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான எந்த புதிய சலுகைகளும் வெளியாகவில்லை. அதாவது, விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை பற்றிய அறிவிப்பு வெளியிடாதது, விவசாய இடுபொருளான உர மானியத்திற்கு கடந்த ஆண்டை விட 50 ஆயிரம் கோடி குறைவாக ஒதுக்கீடு செய்தது, உணவு மானியத்தை குறைத்தது போன்ற செயல்களை கண்டித்து திருவாடானை பகுதியைச் சார்ந்த விவசாய சங்கத்தினர், போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது போராட்டம் நடத்திய நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

12. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி, ட்ரக் வாங்க அதிகபட்சம் ரூ.75 இலட்சம் வரை மானியத்துடன் கடனுதவி

அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை (நீட்ஸ்) 2012-13 முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த, திட்டத் தொகை ரூ.10.00 இலட்சத்துக்கு மேலும் ரூ.500.00 இலட்சத்தை மிகாமலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனுற குறைந்த பட்சம் +2 தேர்ச்சி - பட்டம் - பட்டயம் - தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது 21-க்கு குறையாதிருக்க வேண்டும். தனிநபர் மட்டுமன்றி தகுதி பெற்ற ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்த கூட்டாண்மைப் பங்குதாரர் (பார்ட்னர்ஷிப்) அமைப்புகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். பட்டியல் பழங்குடி இனத்தினர் ஆட்டோ, டாக்சி, டூரிஸ்ட் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பேருந்து, மினி பஸ், சரக்கு போக்குவரத்துக்கான லாரி, ட்ரக், போன்றவற்றை இத்திட்டத்தில் மானியத்தில் பெறலாம்.


13. இம்முறை விவசாயிகளின் கருத்துகள் கொண்டு வேளாண் நிதிநிலை தயாரிப்பு

2023-2024 வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு விவசாயப் பெருமக்களும், பொதுமக்களும் உழவன் செயலி - வேளாண் நிதிநிலை அறிக்கை பக்கம், அல்லது tnfarmerbudget@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது வாட்ஸ்அப் எண் 9363440360 உள்ளிட்டவை மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். கடிதங்கள் வழியே கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய முகவரி வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலர், வேளாண்மை உழவர் நலத்துறை, தலைமைத் செயலகம், புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600009 முகவரிக்கும் கடிதங்கள் அனுப்பலாம். இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் உங்கள் கருத்துக்கள் முக்கியம் என தமிழக வேளாண் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

14. இந்திய வேளாண் பொருட்களுக்கு வெளிநாட்டில் தேவை அதிகரிப்பு: மாவட்ட அட்சித்தலைவரின் கூற்று

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (அபேடா) 37-வது நிறுவன தினத்தை முன்னிட்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழில் முனைவோர்களுக்கான ஏற்றுமதி, இறக்குமதி மேம்பாட்டுப் பயிற்சியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் டாக்டர் எஸ்.நடராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில், திருவள்ளூர் மாவட்டம் வேளாண் ஏற்றுமதியில் தமிழ்நாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கு நெல், வேர்க்கடலை, காய்கறி மற்றும் பழ வகைகள் அதிகமாக பயிரிடப்படுவதும், மேலும் சென்னை துறைமுகம் மிக அருகாமையில் இருப்பதும் ஏற்றமதிக்கு சாதகமான சுழல் ஆகும் என்றார். வேளாண் விளைபொருட்களுக்கு உள்ள சந்தையை விவசாயிகள், தொழில் முனைவோர், ஏற்றுமதியாரளர்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.

15. 2 லட்சம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தும் வகையில் அடுத்த ஐந்தாண்டுகளில், 2 லட்சம் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACS), பால் பண்ணை மற்றும் மீன்வளக் கூட்டுறவு சங்கங்களை அமைக்க, மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ”நபார்டு(NABARD), தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (NFDB) ஆகியவற்றின் ஆதரவுடன் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மாவட்ட விவசாயிகள் அதிகளவு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்-தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி

ரைத்தரிசி திட்டத்தில் ஹெக்டருக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை - கர்நாடக பட்ஜெட்

English Summary: PM Kisan 13th Term; Check name online Published on: 19 February 2023, 02:25 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.