1. செய்திகள்

விவசாயிகளின் வங்கிகணக்கில் நேரடியாக- PM kisan அடுத்த தவணைக்கான தேதி அறிவிப்பு!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
PM to release 17th installment

3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, தனது முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கான நலத்திட்டங்களில் ஒன்றான PM kisan நிதியின் 17-வது தவணையை வெளியிடுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இந்நிலையில், 17 வது தவணையினை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைப்பதற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனுக்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திட்டங்களில் ஒன்று தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பி.எம்.கிசான் 17 வது தவணை- தேதி என்ன?

இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (PM kisan சம்மான் நிதி) 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக அளிக்கப்படுகிறது. இது அவர்களது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுகிறது.

இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனிடையே PM கிசானின் 17-வது தவணையினை வருகிற ஜூன் 18 ஆம் தேதி வாரணாசியில் நடைப்பெறும் அரசு நிகழ்வில் பிரதமர் மோடி விடுவிப்பார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், உத்தரபிரதேச ஆளுநர், ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரபிரதேச அரசின் பல்வேறு அமைச்சர்கள் உட்பட மதிப்பிற்குரிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு நன்றி: சிவராஜ் சிங் சவுகான்

இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது, ​​ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், ”விவசாயம் போன்ற முக்கியமான துறையின் பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்ததற்காக பிரதமருக்கு நன்றி. இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம் விவசாயம். இன்றளவும் விவசாயத்தின் மூலமே பெரும்பாலான வேலை வாய்ப்புகள் உருவாகின்றன.” எனத் தெரிவித்தார்.

Read also: விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

இந்நிலையில் 17 வது தவணை பெறும் பயனாளியின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை நீங்களே சரிபார்க்கலாம். அதன் விவரம் பின்வருமாறு:

  • PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் (https://pmkisan.gov.in/)
  • வலதுபுறத்தில் உள்ள 'பயனாளிகள் பட்டியல்' (Beneficiary List) என்பதைக் கிளிக் செய்யவும்
  • அதன்பின் தோன்றும் பக்கத்தில் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமம் என்கிற கேள்விகளுக்கு சரியான விவரங்களை தேர்ந்தெடுக்கவும்.
  • இதன்பின் 'Get Report' டேப்பினை கிளிக் செய்யவும்
  • 17-வது தவணை பெற தகுதியான பயனாளிகளின் பட்டியல் விவரம் அப்பக்கத்தில் வரும். அவற்றில் உங்களது பெயரை சரிப்பார்த்துக் கொள்ளவும்.
  • PM kisan-ல் உங்களது தகவல்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் அல்லது கேள்விகள் இருப்பின், விவசாயிகள் பின்வரும் இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்- 155261/011-24300606. நீங்கள் மெயில் மூலமாகவும் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். (pmkisan-ict@gov.in)
  • PM Kisan Yojana மூலம் பயனடையும் விவசாயிகளை அடையாளம் காண, சரிபார்ப்பு செயல்முறை அல்லது e-KYC அவசியமானது. e-KYC, ஆதார் விவரங்கள், நில விதைப்பு மற்றும் பிற விவரங்களை புதுப்பித்த விவசாயிகள் மட்டுமே அடுத்த தவணைக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PM kisan 15-வது தவணையினை கடந்தாண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதியும், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 16-வது தவணையினை வருகிற பிப்.28 ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நடைப்பெற்ற நிகழ்விலும் பிரதமர் மோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் விடுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:

கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு!

இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? உணவு, உபகரணங்கள் இலவசம் !

English Summary: PM modi to release 17th installment amount of PM KISAN at Varanasi Published on: 15 June 2024, 04:19 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.