1. செய்திகள்

இன்று முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு அமல்

T. Vigneshwaran
T. Vigneshwaran

Ramanathpuram

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (11ஆம் தேதி) இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 30ஆம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது.

இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை கருத்தில் கொண்டு இன்று முதல் (வெள்ளிக்கிழமை) 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வருகிற 15ஆம் தேதி வரையும், அக்டோபர் மாதம் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களில் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்படுகிறது.

நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று ஜோதி எடுத்து வரவேண்டும். அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருகிறவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் முன்அனுமதி பெற்றுதான் வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க:

தமிழகத்தில் களைகட்டிய ஓணம் பண்டிகை

விஷக்காய்ச்சல் அபாயம்: 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறையா?

 

English Summary: Prohibitory Order 144 will come into force from today for a period of 2 months

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.