1. செய்திகள்

சனிக்கிழமையும் பள்ளி? மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
School will also function on Saturday says Minister Anbil Mahesh

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் சனிக்கிழமைத் தோறும் பள்ளிகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர், “கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையில், மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டதன் பின்னணி:

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதத் தொடக்கத்தில் திறப்பது எப்போதும் வழக்கம். அதன்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும், 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும் பள்ளி திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்ப்பாராத வகையில் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வந்தன. இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால விடுமுறை முடிந்து புதிய வகுப்புகள் வருகிற ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.

ஆனால் குறிப்பிட்ட தேதி வரைக்குமே வெப்பநிலையானது இன்னும் ஒரு சில நாட்கள் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் மற்றும் தன்னார்வ வானிலை கணிப்பு நிபுணர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பள்ளிகள் திறக்கும் தேதியினை மேலும் ஒரு சில நாட்கள் தள்ளி வைக்க அனைத்து தரப்பிலிருந்தும் அரசுக்கும் கோரிக்கை எழுந்து வந்தது.

இதைத் தொடர்ந்து சென்னை, தலைமைச் செயலகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனையின் நிறைவாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தனர். 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவானது அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் இன்று செய்தியாளர்களிடம், பாடச்சுமையினை கருத்தில் கொண்டு சனிக்கிழமைத்தோறும் பள்ளி வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 12-ல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு நேற்று முதல் 11-ம் தேதி வரை 3 நாட்களுக்கு 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

2-வது முறையாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பு- அமைச்சர் சொன்ன தகவல்!

அமேசான் உடன் ICAR புரிந்துணர்வு ஒப்பந்தம்- விவசாயிகளுக்கு என்ன நன்மை?

English Summary: School will also function on Saturday says Minister Anbil Mahesh Published on: 10 June 2023, 11:49 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.