Schools open in Tamil Nadu
தமிழகத்தில் செப்டெம்பர் 1 ஆம் தேதி முதல், 9, 10, +1 மற்றும் +2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் துவங்கப்பட உள்ளன. இந்த சூழ்நிலையில், பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா முன்னெசரிக்கை நடவடிக்கைகள் பற்றி தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள் இதோ:
- 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.
- முதல் நாளில் 50% மாணவர்களும், மறு நாள் எஞ்சிய 50% மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வர வேண்டும்.
- பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
- கொரோனா அறிகுறி உள்ள ஆசிரியர்களையும் மாணவர்களையும் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது.
- முகக்கவசம் அணிதல், அவ்வப்போது கைகளை சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாக கடைபிடிக்கப் பட வேண்டும்.
- பள்ளிகளில் வைட்டமின் மாத்திரைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
எனினும், கொரோனா தொற்றின் நிலை சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் படி, செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன் பிறகு கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் நேற்று 1,804 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,92,436 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 32 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,225 தற்போது ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 34,570 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க:
Share your comments