தென்மேற்கு பருவக்காற்று (South west monsoon) காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது முதலே தமிழக்த்திலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் 15-ஆம் தேதி வரை கேரளா, கர்நாடகா கடலோர பகுதி மற்றும் லட்சத்திவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூரைக்காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்
மத்திய கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்படிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரியாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் அளவிற்கும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 2 செ.மீ மழையும், வால்பாறை மற்றும் சின்கோனா பகுதிகளில் தலா ஒரு செ.மீ மழையும் பதிவாகியுள்ளது
Share your comments