தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், தெற்கு ஆந்திரா கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 9ம் தேதி அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் உருவாகக்கூடும், அதனை அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
-
அக்டோபர் 9 மற்றும் 10ம் தேதி அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
அக்டோபர் 10ம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
அக்டோபர் 11ம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் வரும் 8ம் தேதிக்குள் கரை திரும்புமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
குறைந்த வாடகையில் விவசாய இயந்திரங்கள் - சூப்பரான திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர்
PM Kisan Update : ரூ.2000 பணம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லையா? உடனடியாக சரிபாருங்கள்!
அதிக மகசூல் அள்ளித்தரும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை! - விவசாயிகள் ஆர்வம்!
Share your comments