Tamil Nadu: When will the Corona 3rd wave reach its peak? Alert
இந்தியாவில் கொரோனா 3-வது அலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று காலையின் நிலவரப்படி 3 லட்சம் தினசரி பாதிப்பை எட்டி உள்ளது.
இதற்கிடையே விக்கேன்ட் லாக்டவுனுக்குப் பிறகு, டெல்லி, மும்பை நகரங்களில் கொரோனா தாக்கம் சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. இந்த நகரங்களில் கொரோனா உச்சத்தை தொட்டுவிட்டு குறைந்து வருவதாக சில நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா முதல் அலை மற்றும் கொரோனா 2-வது அலையின் தாக்கத்தை சரியாக கணித்துக்கூறிய கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணீந்திர அகர்வால், தற்போது 3-வது அலை தொடர்பாகவும் தனது கணிப்பை அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா 3-வது அலை எப்போது உச்சத்தை தொடும்? எப்போது சரியத் தொடங்கும்? என்ற விவரங்களை அவர் தனது ஆய்வில் கூறி குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வு தகவல்கள் நேற்று வெளியானது.
அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய 3 நகரங்களிலும் கொரோனா 3-வது அலை ஏற்கனவே உச்சத்தை தொட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 12-ந் தேதி மும்பையில் கொரோனா 3-வது அலை உச்சத்தை தொட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுபோல கொல்கத்தாவில்13-ந் தேதியும், டெல்லியில் கடந்த 16-ந் தேதியும் கொரோனா 3-வது அலை உச்சத்துக்கு எட்டியது, அவரது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். பீகாரில் கடந்த 17-ந் தேதி கொரோனா 3-வது அலை உச்சத்துக்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது.
குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று (புதன்கிழமை) கொரோனா 3-வது அலை உச்சத்தை எட்டுவதாக மணீந்திர அகர்வால் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் நாளையும் (20-ந்தேதி), பெங்களூருவில் வருகிற 22-ந்தேதியும், கர்நாடகா மாநிலத்தில் அதற்கு அடுத்த நாளான 23-ந்தேதியும் கொரோனா 3-வது அலை உச்சத்துக்கு வரும் என்று அவர் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உச்சத்தை தொடும் தேதி (The peak date in Tamil Nadu)
அந்த வகையில் தமிழகத்தில் வருகிற 25-ந் தேதி கொரோனா 3-வது அலை உச்சத்தை எட்டும். அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கும் என்று பேராசிரியர் மணீந்திர அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தில் வருகிற 26-ந் தேதியும், ஆந்திராவில் 30-ந் தேதியும் கொரோனா 3-வது அலை உச்சத்துக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியரின் இந்த கணிப்புகள் சூத்ரா என்ற அமைப்பு மூலம் வெளியாகி உள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் வருகிற 23-ந் தேதி கொரோனா 3-வது அலை உச்சத்துக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுவரை தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் படிக்க:
தடுப்பூசியின் 3வது டோஸ், இன்று முதல் பதிவு தொடக்கம்
ESIC ஆட்சேர்ப்பு 2022: 3800 காலியிடங்கள், பிப். 15க்கு முன் விண்ணப்பிக்கவும்
Share your comments