தமிழகத்தில் தென்மேற்கு பருவழை (South west Monsoon) தீவிரமடைந்திருப்பதால், 3 மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில்,
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கனமழைக்கு வாய்ப்பு (Heavy raifall)
அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning for fisherman)
-
வரும் 27ம் தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று சுமார் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
ஜூன் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை, வடக்கு அரபிக்கடல் மற்றும் குஜராத் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று சுமார் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
-
இதேபோல், ஜூன் 26 முதல் 29ம் தேதி வரை, தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், ஐம்பது முதல் அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும்.
-
மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நாற்பது முதல் ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
எனவே இந்த குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் அப்பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை மையம் - IMD
இதேபோல், இமயமலையை ஒட்டிய மேற்கு வங்கம், சிக்கிம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் ஓரிரு பகுதிகளில் இன்று கனமழை அல்லது மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பலத்த இடி, மின்னல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இடி- மின்னல் தாக்கி 83 பேர் பலி (83 killed by lightning and thunderstorms)
பீகார் மாநிலத்தின் பல இடங்களில் இடி- மின்னல் தாக்கி ஏற்பட்ட விபத்துக்களில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் , மொத்தம் எண்பத்து மூன்று பேர் பரிதாபமாக பலியானது குறிப்பிடத்தக்கது.
Elavarase Sivakumar
Krishi jagran
மேலும் படிக்க..
முத்ரா கடன்தாரர்களுக்கு மத்திய அரசின் சிறப்பு போனஸ்
RBI கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - விவசாயிகளுக்கு என்ன பயன்?
Share your comments