1. செய்திகள்

இனி சார்பதிவாளர் அலுவலகங்கள் இந்த நாளிலும இயங்கும்!

R. Balakrishnan
R. Balakrishnan

Sub Registrar offices will also be running on Saturdays

தமிழகத்தில் இனி சனிக்கிழமையும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிவிப்பில் இத்தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையும், சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும் என்பது மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

சார்பதிவாளர் அலுவலகங்கள் (Sub Registrar office)

  • சென்னை மற்றும் மதுரையில் இரண்டு பதிவு மண்டலங்கள் உருவாக்கப்படும்.
  • சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை மையமாக வைத்து கூடுதலாக ஒரு புதிய மண்டலம் அமைக்கப்படும்.
  • பொது மக்கள் பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும்.
  • சனிக்கிழமை மட்டும் ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • பதிவு செய்த திருமண சான்றுகளை இணையம் வழியாக விண்ணப்பித்து திருத்தம் செய்யும் வசதி ரூ.50 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.
  • அவசர ஆவண பதிவிற்காக, பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்படுகிறது.
  • தட்கல் முறையில் ரூ.5 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • முதல் கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும் படிக்க

பெட்ரோல் (ம) டீசல் வரியை குறைக்காத மாநிலங்கள்: பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் சமையலறை! சவுதி அரேபியாவில் அதிர்ச்சி சம்பவம்!

English Summary: The Sub Registrar offices will also be running on Saturdays!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.