1. செய்திகள்

TNPSC ஆட்சேர்ப்பு 2023 வேலை அறிவிப்பு

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 93 பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 93 பணியிடங்களில் வேளாண் அலுவலர் பணிக்கு 37, தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 48, உதவி வேளாண்மை இயக்குநர் பணிக்கு 08 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் TNPSC ஆட்சேர்ப்பு 2023 வேலை அறிவிப்புக்கு 10 பிப்ரவரி 2023 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிகளுக்கான எழுத்துத் தேர்வை 20,23 மே 2023 அன்று ஆணையம் நடத்தும்.
இந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி கூடுதல் தகுதியுடன் வேளாண்மை/எம்.எஸ்சி/பி.எஸ்சி., தோட்டக்கலையில் இளங்கலை உள்ளிட்ட குறிப்பிட்ட கல்வித் தகுதி பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வேளாண் அலுவலர் (விரிவாக்கம்): வேளாண்மையில் இளங்கலை (B.Sc Agriculture)மற்றும், போதுமான தமிழ் அறிவு இருக்க வேண்டும்.
இந்த பதவிகளுக்கான கல்வித் தகுதி/தகுதி/வயது வரம்பு/தேர்வு செயல்முறை மற்றும் பிற புதுப்பிப்புகளின் விவரங்களுக்கு அறிவிப்பு இணைப்பைப் பார்க்க விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in மூலம் ஆன்லைன் முறையில் 10 பிப்ரவரி 2023 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.

1,IYOM 2023 தினை ஆண்டை முன்னிட்டு: தினை குறித்து சிறப்பு பதிப்பை கிரிஷி ஜாக்ரன் வெளியீடு

 IYOM 2023 ஐக் கொண்டாடும் வகையில் கிரிஷி ஜாக்ரன் ஒரு மெகா நிகழ்வை ஏற்பாடு செய்து, ‘தினை பற்றிய சிறப்புப் பதிப்பை’ வெளியிட்டு, ஜனவரி 12 அன்று தில்லியில் உள்ள அவர்களின் தலைமையகத்தில் தினை பற்றிய விவாதத்தை நடத்தினர்.
இந்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா ஜனவரி 12ம் தேதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
 
கிரிஷி ஜாக்ரனின் தலைமை ஆசிரியர் எம்.சி. டொமினிக், டாக்டர் மனோஜ் நர்தியோசிங், ஆப்பிரிக்க ஆசிய ஊரக வளர்ச்சி அமைப்பின் (ஏஏஆர்டிஓ), உத்தரகாண்ட் விவசாய அமைச்சர் கணேஷ் ஜோஷி மற்றும் டாக்டர் அசோக் உள்ளிட்ட பல்வேறு உயரதிகாரிகள், மற்றும் தல்வாய், CEO, தேசிய மழைநீர் பகுதி ஆணையம் (NRAA) முன்னிலையில் விளக்கேற்றி மாநாட்டைத் தொடங்கினர்.

2,யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா  தாக்க்ஷாவுடன் கிசான் ட்ரோன் நிதிக்கான அன்மெண்ட்  அமைப்புகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

கிசான் ட்ரோன் நிதிக்கான இந்த ஒப்பந்தம் விவசாயிகளை ஊக்குவித்து  ட்ரோன்களை வாங்குவதையும் பயன்படுத்துவதையும் எளிதாகும் என்று தெரிவிக்க பட்டுள்ளது.

சென்னையை தளமாகக் கொண்ட தாக்க்ஷா அன் அன்மெண்ட் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் அதிக  தொழில்நுட்பங்களை கொண்ட விவசாயம், பாதுகாப்பு, கண்காணிப்பு, தளவாடங்கள் மற்றும் ஆய்வு போன்ற பல்வேறு துறைகளுக்கான ட்ரோன்களை உருவாக்குகின்றது.

இயக்குனர் ராமநாதன் நாராயணன் கூறுகையில், தாக்க்ஷா ட்ரோன்கள் சிறந்த நவீன தொழில்நுட்பத்தினால் இயங்குகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை செய்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று கூறினார்.

தாக்க்ஷாவின் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்கும் அக்ரி ஸ்ப்ரேயிங் வாங்குவதற்கான நிதி வசதியைப் பெற வாடிக்கையாளர்களுக்கு இந்த ஒப்பந்தம்  உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனியன் வங்கி நாடு முழுவதும் உள்ள அதன் 8500 கிளைகள் மூலம் ட்ரோன் கடன்களை வழங்கும் என்று தெரிவிக்க பட்டுள்ளது.

ட்ரோன்கள் விவசாயிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு இரசாயனங்களை பாதுகாப்பாக தெளிக்க உதவுகின்றன.

பி.ஸ்ரீனிவாச ராவ், பொது மேலாளர்-வேளாண் வணிகம் வருங்காலத்தில் ட்ரோன்  வாங்குபவர்களுக்கு தொந்தரவு இல்லாத ட்ரோன் நிதியை வழங்க “யூனியன் கிசான் புஷ்பக் திட்டம்” தொடங்கப்பட்டது என்று கூறினார்.

3,சபரிமலையில் பிரசாதம் தடை

 சபரிமலையில் 'அரவண பிரசாதம்' உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தியது கேரள உயர்நீதிமன்றம் கொல்லத்தை சேர்ந்த சப்ளையர் ஒருவரிடமிருந்து TDB வாரியத்தால் கொள்முதல் செய்யப்பட்ட ஏலக்காயில் பூச்சிக்கொல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டது தெரியவந்தது.
சபரிமலையில் பயன்படுத்தப்படும் ஏலக்காய்களில் குறைந்தபட்ச அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி (எம்ஆர்எல்) பூச்சிக்கொல்லி மருந்துகள் இருந்ததால், சபரிமலையில் ‘அரவணப் பிரசாதம்’ விற்கக்கூடாது என்று திருவிதாங்கூர் தேவசுவம் போர்டுக்கு (டிடிபி) கேரள உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

4,Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய அறிவிப்பு

 ரேஷன் கடைகளில் பொருளை வாங்கும் முன்பு கண்களை காட்டினால்போதும் இனி ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது. கருவிழிகளை ஸ்கேன் செய்து அதன் மூலம் பயனாளர்களை அடையாளம் கண்டு பொருட்களை வழங்கலாம். இது குறித்து முன்னரே ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தாலும், திட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சர் சக்கரபாணி புதிய தகவலை தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாகத் தமிழக சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பேசியவர்,"கைரேகை வைத்து பொருள் பெற இயலாத மாற்றுத்திறனாளிகள், வயலில் வேலை செய்வோர் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் கண் கருவிழி மூலம் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே மாதிரி திட்டமாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
விரைவில் அந்த திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்து இருக்கிறார்.

5,முதலமைச்சரின் விவசாயிகள் பாதுகாப்புத் திட்டம் குறித்த செய்திக்குறிப்பு

 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அணைத்து வட்டங்களிலும் உள்ள விவசாயத் தொழில் செய்யும் உழவர் பாதுகாப்பு அட்டை பெற்றுள்ள அணைத்து விவசாயிகளும் "முதலமைச்சர் உழவர் திட்டத்தின்" கீழ் கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை மற்றும் காச நோய் ,புற்றுநோய் எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக மாதாந்திர உதவித்தொகை பெற்று பயனடையும் பொருட்டு தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரையோ அல்லது தனி வட்டாட்சியரை அணுகி ஆவணங்களுடன் மனு செய்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று திருத்தி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

6,கர்நாடகாவில் குரங்கை விரட்ட புது யுக்தி 

சாமராஜநகரில் உள்ள அஜ்ஜீபுரா பகுதியைச் சேர்ந்த விவசாயி மஞ்சு, குரங்குகளின் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காக்க, தனது வளர்ப்பு நாய்க்கு புலி வண்ணம் பூசி, குரங்குகளின் தொல்லையை விரட்டியடித்துள்ளார். தற்போது அந்த நாய் புலி வேடமிட்டு அவரை பின்தொடர்ந்து செல்லும் படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தாலுகாவில் உள்ள அஜ்ஜீபுராவின் புறநகரில் உள்ள தோட்டங்களுக்கு குரங்குகள் அதிக அளவில் வருவதால் அவற்றை வளர்ப்பது பெரும் சவாலாக இருந்தது. குரங்குகளை விரட்டும் மஞ்சுவின் திட்டம் பலனளிக்கிறது. பண்ணையில் பயிரிட்டிருந்த பயிர்கள், தென்னைகளை நாசம் செய்து வந்த குரங்குகள் தற்போது நாய்க்கு பயந்து இடம் பெயர்ந்துள்ளன. பயிர் விவசாயிகளின் கையை வந்தடைகிறது. 

8,பொங்கலுக்குச் செங்கரும்பு அறுவடை தீவிரம் - மகிழ்ச்சியில் விவசாயிகள்

 சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர் முதலான பகுதிகளில் பயிரிடப்படும் செங்கரும்புக்கு தற்போது அரசிடம் இருந்தும் வெளி மார்க்கெட்டிலும் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களில் இருக்கின்றன. தற்பொழுது வெளி மாவட்டங்களுக்கும் ரேஷன் கடைகளுக்கும் கரும்பினை அறுவடை செய்து அனுப்புகின்ற பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் கரும்பு விளைச்சல்அதிகரித்து இருக்கிறது. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்துள்ளதாகவும் இனிப்பான பொங்கலை இந்த வருடம் விவசாயிகள் கொண்டாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் பலர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
 

9,தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி  தொடங்கி வைத்தார்

ஹூப்ளியில் உள்ள ரயில்வே மைதானத்தில் 26-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை  நேற்று  தொடங்கி வைத்தார். 26வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி ரிமோட்டை அழுத்தி தொடங்கி வைத்தார் .

 

10,வானிலை அறிக்கை

 தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ கூடும்.
ஓரிரு இடங்களில் அதிகாலை வேலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க:

 

English Summary: TNPSC Recruitment 2023 Job Notification Published on: 13 January 2023, 05:29 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.