1. செய்திகள்

12th Result 2024: வெளியானது ப்ளஸ் 2 ரிசல்ட்- பாட வாரியாக தேர்ச்சி எவ்வளவு?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
12th Board Exam Results

பெரிதும் எதிர்ப்பார்த்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவினை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9 ஆம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

(2023-2024) ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை :7,60,606. இதில் மாணவியர்களின் எண்ணிக்கை: 4,08,440, மாணவர்களின் எண்ணிக்கை: 3,52,165. மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 1. இதில் மாணாக்கர், பள்ளி, பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

தேர்ச்சி விவரங்கள்:

தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 7,19,196 (94.56%). மாணவியர் 3,93,890 (96.44%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,25,305 (92.37%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 1 (100%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 4.07 சதவீத மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் 2023-ஆம் ஆண்டு நடைப்பெற்ற பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,03,385. அதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 7,55,451. மொத்த தேர்ச்சி சதவிகிதம் 94.03%. கடந்த கல்வியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விவரங்கள்:

  • மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை- 7532
  • 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை- 2478
  • 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 397

பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்:

  • அரசுப் பள்ளிகள்- 91.02%
  • அரசு உதவி பெறும் பள்ளிகள்- 95.49%
  • தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 98.70%
  • இருபாலர் பள்ளிகள்- 94.78%
  • பெண்கள் பள்ளிகள்- 96.39%
  • ஆண்கள் பள்ளிகள்- 88.98%

பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்:

  • அறிவியல் பாடப் பிரிவுகள்- 96.35%
  • வணிகவியல் பாடப் பிரிவுகள்- 92.46%
  • கலைப் பிரிவுகள்- 85.67%
  • தொழிற்பாடப் பிரிவுகள்- 85.85%

முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்:

  • இயற்பியல்- 98.48%
  • வேதியியல்- 99.14%
  • உயிரியல்- 99.35%
  • கணிதம்- 98.57%
  • தாவரவியல்- 98.86%
  • விலங்கியல்- 99.04%
  • கணினி அறிவியல்- 99.80%
  • வணிகவியல்- 97.77%
  • கணக்குப் பதிவியல்- 96.61%

தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 5603. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 5161 (92.11%). தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125. இதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 115 (92%). தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in மற்றும் http://dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறியலாம். மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:

மே 7 மற்றும் 8: எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?

MFOI 2024 விருது நிகழ்வின் நடுவர் மன்ற குழு தலைவராக NITI ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் நியமனம்!

English Summary: tnresults nic in released the HSC 12th Board Exam Results 2024 Published on: 06 May 2024, 11:32 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.