மண் வளத்தை பாதுகாக்க பல தானிய, பயறு வகை பயிர்கள் மற்றும் மூடு பயிர்கள் விளைவிப்பு நல்ல பயனை தரும் என வேளாண் அறிஞர்கள் தங்களது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். திருச்சி மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் (இனப்பெருக்கம் மற்றும் மரபியல்) முனைவர்.மு.சகிலா, பல தானிய பயிர் விளைவிப்பு தொடர்பான ஆய்வு முடிவுகளின் முக்கிய அம்சங்களை பட்டியலிட்டு தொகுத்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
மண்ணின் ஆரோக்கியம் மற்றும் வளத்தை பராமரிக்க போதுமான மற்றும் சீரான ஊட்டச்சத்து வழங்கல் வேண்டும். பலவகை பயிர்களை நடுவதால் மண்ணின் சத்துக்களை சமப்படுத்த இயலும். நெல், கரும்பு ஆகியவை தண்ணீரை அதிகமாக உறிஞ்சக் கூடியது, இதை தவிர்ப்பதற்கு நாம் சுழற்சி பயிராக அதே வயலில் குறைவாக நீரை உறிஞ்சும் சத்து மிக்க பயிர்களான மக்காச்சோளம் , பயறு வகை பயிர்கள் ,எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் சிறுதானிய பயிர்களை நடலாம். இதன் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதை சிறிதளவு குறைத்து, மண்ணின் ஆரோக்கியத்தன்மையை பாதுகாக்க முடியும்.
மண் வளத்தை பாதுகாக்க எளியவழி:
தானியம் மற்றும் தானியம் சார்ந்த பயிர் முறைகள் மண்ணில் சத்துபோக்கக் கூடியதாகவும் மேலும் மண்ணில் உள்ள உயிரியல் சிதைவினை போக்குவதாகவும் உள்ளது. ஆனால் தானிய பயிர் மற்றும் பயறு வகை பயிர்களை சேர்ந்து பயிரிட்டால் மண்வளம் பாதுகாக்கப்படும்.
பல்வேறு வகையான பயிர்களை நாம் பயிரிடும்போது மண்ணில் பயிரினை தாக்கக்கூடிய பல்வேறு வகையான நோய்களை உண்டாக்கக்கூடிய பூஞ்சைகளையும் அதனுடைய வாழ்க்கை சுழற்சிகளையும் அறுத்து விடுகிறது.மேலும் மூடிப் பயிர்ளை நாம் பயிரிடும்போது மண்ணில் அரிப்பு தன்மையை பாதுகாக்கலாம்.அதோடு மட்டுமின்றி ஆணிவேர் உள்ள பயிர்களை நடும்போது மண்ணில் பெரிய துகள்களை போடுவதோடு மட்டுமின்றி நீர் ஊடுருவி போக வழிவகை செய்கிறது.
அதோடு மட்டுமின்றி சல்லி வேர் உடைய பொருட்களானது மண்ணுடைய கூட்டுத் தன்மையையும், மண்ணின் வளத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது. மூடிப் பயிர்களும் மண்ணின் வளத்தை பாதுகாப்பதோடு மட்டுமின்றி மண்ணிற்கு அங்ககப் பொருள்களையும் அதனுடைய அழிந்து போன மக்கிப்போன பொருட்களில் இருந்து கிடைக்க உதவுகின்றது.
இந்தப் பயிர்கள் உடனடியாக மண்ணில் உள்ள சத்துக்கள் அடித்து செல்லாதபடியும் பாதுகாக்கிறது. அதாவது நைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடித்து செல்லாதபடி பாதுகாக்கிறது.பயறு வகை பயிர்களின் வேர்கள் தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தக்கூடிய பாக்டீரியாக்களையும், மண்ணில் நிலை நிறுத்தச் செய்வதோடு மட்டுமின்றி மண்ணில் அதிகப்படியான தழைச்சத்தை உருவாக்குகிறது.
மைக்கோரைசல் பூஞ்சைகள் 90% நிலப்பரப்பு தாவரங்களில் காலனித்துவப்படுத்துகின்றன. அவை ஊட்டச்சத்துக்கள் பெற அனுமதிக்கிறது மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை சமாளிக்கின்றன. மூடிப் பயிர்களும் மைகோரைசலை நல் விளைவு உண்டாக்கி பூஞ்சை, மண்ணைப் பாதுகாக்க மிகவும் சாதகமான பூஞ்சை கலவையுடன் ரைசோஸ்பியரை மாற்றியமைக்கிறது என தனது தொகுப்பு கட்டுரையில் முனைவர் மு.சகிலா குறிப்பிட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட தகவல் மற்றும் கட்டுரை தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விளக்கங்கள் தேவைப்படுமாயின் முனைவர் மு.சகிலா அவர்களைத் தொடர்புக்கொண்டு (தொடர்பு எண்: 99424 49786) விளக்கம் பெறலாம்.
Read more:
துவரை சாகுபடியில் ஹெக்டருக்கு 1800 கிலோ மகசூல் தரும் சூப்பர் ரகத்தின் சிறப்பியல்புகள்!
மானியத்தில் தீவனச்சோளம் கோ எப்.எஸ்-29 & வேலி மசால் மற்றும் தட்டைப்பயிறு விதைகள்- என்ன திட்டம்?
Share your comments