1. மற்றவை

ஒரு முறை சார்ஜ் போட்டால் 307 கி.மீ மைலேஜ்

T. Vigneshwaran
T. Vigneshwaran
E- Bikes

நாளுக்கு நாள் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சத்தமே இல்லாத இயக்கம், புகை இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்தது உள்ளிட்ட அம்சங்களால் வாடிக்கையாளர்களும் எலக்ட்ரிக் பைக்குகளை விரும்பத் தொடங்கியுள்ளனர். அதனால் எலக்ட்ரிக் பைக்குளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தான் தற்போது பெட்ரோல் இருசக்கர வாகனத் தயாரிப்பில் ஜாம்பவான்களாக இருக்கும் பஜாஜ், யமாஹா மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் கூட வரும் ஆண்டு எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளன. என்னென்ன நிறுவனங்கள், எந்தெந்த மாடல்களில் பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ளார்கள் என்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்

அல்ட்ரா வொயலெட் F-77- சூப்பர் பைக்

இந்தியாவின முன்னனி எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வொயலெட் நிறுவனம் இந்த ஆண்டு எலக்ட்ரிக் சூப்பர் பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. F-77 என்ற பெயரில் அறிமுகமாக உள்ள இந்த பைக்கின் விலை 3லட்சத்து 80 ஆயிரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பைக் வெளியான பிறகு அநேகமாக இந்த F-77 சூப்பர் பைக் தான் இந்தியாவின் காஸ்ட்லியான எலக்ட்ரிக் பைக்காக இருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 152 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த சூப்பர் பைக், 2.9 விநாடிகளில் 100 கிலோமீடட்ர் வேகத்தை எட்டிப் பிடிக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 307 கிலோமீட்டர் பயணிக்குமாம். 2023 ஆம் ஆண்டு அறிமுகமாக உள்ளது இது உண்மையிலேயே எலக்ட்ரிக் சூப்பர் பைக் தான்.

ஓபன் ரோர் ஸ்போர்ட்ஸ் பைக்

பெங்களூருவை மையமாக கொண்டு இயங்கும் மற்றொரு பிரபல எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனம் ஓபன் ரோர். இந்த நிறுவனம் வரும் ஆண்டு ஸ்போர்ட்ஸ் ரக எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அசத்தலான ஸ்டைலுடன், அதிவேக திறன் கொண்ட வகையில் புதிய பைக் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மணிக்கு அதிக பட்சமாக 100 கிலோ மீ்ட்டர் வேகம் செல்லும் இந்த பைக்குகள் ஒற்றை சார்ஜில் 150 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில வடிவமைக்கப்பட உள்ளது. இதன் விலை 99 ஆயிரம் முதல் இருக்கும் என்றும் தற்போது இதற்கான 17ஆயிரம் ஆர்டர்கள் கையில் இருப்பதாகவும் ஓபன் ரோர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹூஸ்க்வானா இ-பில்லென்

ஹூஸ்க்வானா நிறுவனம் சார்பில் 2023ஆம்ஆண்டு வெளியாக உள்ள மற்றொரு புதிய எலக்ட்ரிக் பைக் இ-பில்லென். பஜாஜ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள ஹூஸ்க்வானா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இ-டியூக் பைக்கில் உள்ள பேட்டரி திறனைப் போலவே ஹூஸ்க்வானா பைக்குகளையும் தயாரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஹீரோ AE-47

இந்தியாவின் முன்னனி பைக் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ நிறுவனமும் இருசக்கர எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் சக்கை போடு போட்ட வருகிறது. ஏற்கனவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து வெற்றிகரமாக சந்தைப்படுத்தியும் வருகிறது ஹீரோ நிறுவனம். தற்போது 2023 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் பைக்குகளையும் தயாரிக்க முடிவ செய்துள்ளது ஹீரோ நிறுவனம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் மாற்றிக்கொள்ளும் பேட்டரி வசதியுடன் இந்த புதிய பைக்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:

உடலை வருத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

கரும்பு வாங்க ஆள் இல்லை - குமுறும் வியாபாரிகள்

English Summary: 307 km mileage on a single charge (1) Published on: 21 January 2023, 07:55 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.