1. மற்றவை

35 ஆண்டு கர்ப்பம்- 73 வயது பாட்டிக்கு அறுவை சிகிச்சை மூலம் கல்குழந்தை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
35 years pregnant- Surgery for 73 year old grandmother

Credit : Samayam Tamil

இயற்கைக்கு மாறான சம்பவங்கள் நிகழும்போது, அது மற்றவர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்திவிடுகிறது.

அந்தவகையில், 73 வயது பாட்டி 35 ஆண்டுகளாகக் கர்ப்பமாகவே இருந்துள்ளார். அவர் வயிற்றிலிருந்த கல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

35 ஆண்டுகள் கர்ப்பம் (35 years pregnant)

அல்ஜிரியாவைச் சேர்ந்த 73 வயது பாட்டிக்கு அண்மையில் வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றில் குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது. எப்படி 73 வயது பாட்டிக்கு எப்படிக் கருத்தரித்தது என யோசித்து அடுத்தகட்ட சோதனைகளை செய்த போதுதான் பெரும் அதிர்ச்சிக் காத்திருந்தது.

கல் குழந்தை (Stone child)

பாட்டியின் வயிற்றில் குழந்தை உருவாகி அந்த குழந்தை கல்லாக மாறியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் இந்த கரு உருவாகி 35 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. சுமார் 2 கிலோ எடை கொண்ட இந்த குழந்தை 7வது மாதம் வரை வளர்ச்சியடைந்துள்ளது. பின்னர் கல்லாக மாறியுள்ளது.

இந்த செய்தி பலரை வியப்புக்கும், சந்தேகத்திற்கும் ஆளாக்கியிருந்தாலும், மருத்துவரீதியில் இது சாத்தியமான ஒன்று தான்.

எப்படி சாத்தியம்? (How is that possible?)

கருமுட்டையில் கரு உருவாகாமல் அடி வயிற்றில் கரு உருவானால் அதை லித்தோபிடியன் lithopedion என் அழைக்கிறார்கள். இப்படி சாதாரணமாக எல்லோருக்கும் கரு உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் அவ்வாறாக  உருவாகும் கரு ஒரிரு நாளில் தானாக வெளியேறிவிடும். அடி வயற்றில் ஏதாவது பாதிப்பு இருந்தால் அது உடனடியாக சிக்கலை ஏற்படுத்தும்.

7 மாதம் வளர்ந்த கரு (7 month old fetus)

குறிப்பிட்ட இந்த பாட்டிக்கு,  35 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வயிற்றுக்குள் சென்ற கரு அடி வயற்றில் சென்று அங்கிருந்து வெளியேற முடியாமல் அங்கேயே வளர்ச்சியடைந்துள்ளது. சுமார் 7 மாதம் வளர்ந்த கரு பின்னர் வளர்ச்சியடையாமல் இருந்துள்ளது. கரு முட்டைக்குள் குழந்தை இல்லாததால் அவருக்கு அந்த காலத்தில் மாதவிடாயும் சரியாக இருந்துள்ளது. ஆனால் உடல் எடை மட்டும் கூடியுள்ளது. 

பாதிப்பு இல்லை (No vulnerability)

வயிற்றுக்குள் இருந்த குழந்தை 7 மாதத்திற்கு பிறகு வளர்ச்சியடையாததால் அவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் இந்த குழந்தையை வெளியே தள்ள முயற்சித்திருக்கும். அது முடியாத பட்சத்தில் இந்த குழந்தையை கல்லா மாற்றியுள்ளது. அதிர்ஷ்ட வசமாக இது இவ்வளவு ஆண்டுகள் பாதிப்பை எதுவும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது வலியை ஏற்படுத்திய நிலையில் 35ஆண்டுகளுக்கு பிறகு இது கண்பிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

மேலும் படிக்க...

1 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்: புதிய திட்டம் துவக்கம்!

ஜனவரி 1 முதல் புதிய விதிகள் அமல்: ரிசர்வ் வங்கி!

English Summary: 35 years pregnant- Surgery for 73 year old grandmother

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.