MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் இன்று, உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பங்கேற்புடன் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
இன்று உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிதியுதவி பங்களிப்போடு, 'வளமான இந்தியாவிற்கான பாதையில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது' என்ற கருப்பொருளில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் சோமானி சீட்ஸ் ஆகிய நிறுவனங்களும் இந்த நிகழ்விற்கு தங்களது ஆதரவினை வழங்கியிருந்தனர்.
500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு:
இந்நிகழ்ச்சியில் கோரக்பூர் DDA அரவிந்த் சிங் தலைமை விருந்தினராகவும், ஸ்ரீ கோரக்நாத் மந்திரின் பிரதான் பூஜாரி யோகி கமல்நாத் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். முற்போக்கு விவசாயிகளான பபிதா பாஸ்வான் மற்றும் ராஜு சிங் ஆகியோர் தங்கள் வெற்றிக் கதையை மற்ற விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முதன்மை சந்தைப்படுத்தல் மேலாளர் சஞ்சய் சேத் பேசுகையில், ”விவசாயிகளின் நலனுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். கோரக்பூரில் உள்ள 6 செயல்பாட்டுக் கிளைகளில், 15 நிமிடங்களுக்குள் விரைவான கடன் வசதியை விவசாயிகள் தங்களது தங்க நகைகளை அடகு வைத்து பெறலாம். மேலும், கடன் வசதி பெறுவது தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள், சந்தேகம் இருப்பின் இலவச தொடர்பு எண் மூலம் எங்கள் ஊழியர்களை அணுகலாம்” என குறிப்பிட்டார்.
மஹிந்திரா டிராக்டர்ஸ் பிராந்திய மேலாளர் சிவம் சிங், மேம்பட்ட விவசாய இயந்திரங்களின் பயன்பாடுகள் குறித்து கூட்டத்தில் உரையாற்றினார். அவரது விளக்கக்காட்சியின் போது, OJA போன்ற மஹிந்திரா டிராக்டர்களின் சமீபத்திய மாடல்கள் பலவற்றின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்.
விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த எம்.சி.டொம்னிக்:
க்ரிஷி ஜாக்ரன் மற்றும் அக்ரிகல்ச்சர் வேர்ல்டின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியரான எம்.சி டொமினிக் நன்றியுரை வழங்கினார். எம்.சி.டொமினிக் பேசுகையில், “இந்த சம்ரித் கிசான் உத்சவை வெற்றியடையச் செய்ய நேரம் ஒதுக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி. கடந்த ஆண்டு நடைப்பெற்ற MFOI 2023- நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோடீஸ்வர விவசாயிகள் (ரூ. 10 லட்சத்துக்கு மேல் வருமானம்) கலந்து கொண்டனர். இந்த விவசாயிகளுக்கு மாவட்டம், மாநிலம், தேசியம் என மூன்று நிலைகளில் விருதுகள் வழங்கப்பட்டன.”
”நடப்பாண்டு நடைப்பெற உள்ள நிகழ்விற்கு, கோரக்பூரில் உள்ள விவசாயிகள் தங்களது பெயர்களை விருதுக்கு பரிந்துரைத்து, இந்த ஆண்டுக்கான 'மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா விருது' நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இதனால் அவர்கள் மாவட்டம் மற்றும் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் அங்கீகாரம் பெற முடியும்.” எனவும் தெரிவித்தார்.
MFOI 2023- நிகழ்வினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
நெற்பயிர் வரப்புகளில் பயறு வகை- விதைப்பது எப்படி? என்ன நன்மை?
நெற்பயிர் விவசாயிகளுக்கு நல்ல செய்தி- ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவு!
Share your comments