1. மற்றவை

6 யோகாசனங்களைச் செய்து அசத்தும் Dog!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Doing 6 Yogasanas Awesome Dog!

செல்ல பிராணிகளில் ஒன்றான, லேப்ரடார் வகையைச் சேர்ந்த நாய் ஒன்று தனது உரிமையாளருடன் சேர்ந்து 6 யோகாசனங்களைச் செய்கிறது. இதில்
உரிமையாளரும், இந்தச் செல்லப்பிராணியும், கொஞ்சம் கூட மாறாது ஒரே மாதிரியாகச் செய்யும் யோகாசனம் மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

விலங்குகளைப் பொருத்தவரை, உரிமையாளரின் உத்தரவுக்குக் காத்திருந்து, உடனடியாகக் கீழ்படியும் தன்மை படைத்தவை. அதிலும், நாய், பூனைப் போன்ற செல்லப்பிராணிகள் என்றால், விலங்குப்பிரியர்களுக்குக் கொள்ளைப் பிரியம். ஏனெனில் அவை சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைகளைப் போலச் செயல்படுகின்றன.

சமூக ஊடகங்களில் பல ஆச்சரியப்படும் விசயங்கள் வெளியிடப்படுவது உண்டு. அவற்றில் சமீபத்தில், லேப்ரடார் வகையைச் சேர்ந்த நாய் ஒன்று தனது உரிமையாளருடன் சேர்ந்து 6 யோகா நிலைகளைச் செய்து அசத்தியுள்ளது. மேக்னஸ் என்றுப் பெயரிடப்பட்ட அந்த ஆண் நாய், பெண் உரிமையாளர் செய்து காட்டும் யோகா நிலைகளை அப்படியே, அச்சுஅசலாகச் செய்கிறது. இதுபற்றிய வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், முதலில் மேக்னசின் உரிமையாளர் யோகா விரிப்பு ஒன்றை தரையில் விரிப்பதுடன் வீடியோ தொடங்குகிறது. அவருடன் சேர்ந்து மேக்னசும் வேறொரு யோகா விரிப்பு ஒன்றை தரையில் விரிக்கிறது.அதன்பின் உரிமையாளரை போன்று ஊர்ந்து சென்று விரிப்பில் படுத்து கொள்கிறது. அடுத்த நிலையில், அந்த அழகிய நாய் தனது முன்னங்கால்களை உரிமையாளரின் கால் மூட்டுகள் மீது வைத்தபடி அமர்ந்து இருக்கிறது. அந்த உரிமையாளர் பின்புறம் படுத்தபடி எழுந்து மேக்னசை நோக்கி செல்கிறார்.

அடுத்து மேக்னஸ் செய்த யோகா பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது. ஆச்சரியமூட்டும் வகையில், 4 கால்களில் நின்றபடி அப்படியே முன்னோக்கி வளைந்து சென்று மேலே எழும்புகிறது.

அதன்பின், அமர்ந்தபடி தனது முன்னங்கால்களை கீழ் நோக்கி மடக்கியபடி யோகா நிலையை செய்கிறது. இறுதியில் உரிமையாளரை போன்று, வானை நோக்கி படுத்தபடி, காலை முன்னோக்கி வைத்து இருக்கும் யோகா நிலையுடன் வீடியோ நிறைவடைகிறது.

மேலும் படிக்க...

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தொடர் விடுறையில் மாணவர்கள்- பள்ளிக்கல்வித்துறைக்கே tough !

English Summary: Doing 6 Yogasanas Awesome Dog!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.