1. மற்றவை

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Poonguzhali R
Poonguzhali R

Holiday notification for schools and colleges!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, முன்னரே சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் நான்கு மாவட்டங்களுக்கும் சேர்த்து விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.

கேரள மக்கள் கொண்டாடக்கூடிய திருவிழாக்களில் மிக முக்கியமானது ஓணம் பண்டிகை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் எனத் தொடர்ச்சியாக வரும் 10 நட்சத்திர தினங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஓணம் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகாலையில் எழுவதும் பெண்கள் கசவு எனும் வெள்ளை நிற புடவையை உடுத்துவதும் வழக்கம். அஸ்தம், சித்திரை, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திர நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வார்கள்.

இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை (08/09/2022) அன்று ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்துத் தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

உள்ளூர் விடுமுறை நாள் அன்று மாவட்டங்களில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டுக் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னரே, சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

வேளாண்மை உழவர் நலத்துறை திட்டங்கள்!

ஆவின் பொருட்கள் விற்பனை சரிவு!

English Summary: Holiday notification for schools and colleges!

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.