1. மற்றவை

கிழிந்துபோன ரூபாய் நோட்டை எப்படி மாற்றுவது?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to replace a torn rupee note?

நாம் கடைகளுக்கு செல்லும்போதோ, பயணங்களின்போதோ, பொது போக்குவரத்தில் பயணிக்கும்போதோ, சில சிதைந்த ரூபாய் நோட்டுகள் நம்மிடம் சிக்கிக்கொள்கின்றன. ஆனால், நாம் அவற்றை வேறு யாரிடமாவது கொடுக்க முயற்சிக்கும் போது பலர் அதை வாங்க மறுத்து விடுகிறார்கள்.

அதேநேரத்தில் இந்த நோட்டுகளை சந்தையில் மாற்றுவதிலும் சிக்கல் எழுகிறது. நீங்கள் எளிதாக இவற்றை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்.
முன்பெல்லாம் இவ்வாறு கிழிந்து போன ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்வதற்கு மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியது கிடையாது. வங்கிக்குச் சென்றுக் கொடுத்தால் எளிதில் மாற்றிக்கொள்ளலாம். இந்த வசதி எல்லா வங்கிகளிலும் இருந்தது.ஆனால் தற்போது நிலைமையே மாறிவிட்டது.

இதற்கான விதிமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன. அவ்வாறு கிழிந்த ரூபாய் நோட்டை மாற்றுவதற்கான விதிமுறைகள் என்ன? என்பதைத் தெரிந்துகொள்வோம்.

  • சிதைந்த நோட்டுகளை மாற்ற வங்கி மறுக்க முடியாது

  • ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, எந்த வங்கியிலிருந்தும் சிதைந்த நோட்டுகளை எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

  • எந்த வங்கியும் கிழிந்த நோட்டுகளை மாற்ற மறுக்க முடியாது. அப்படி செய்தால் அந்த வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க முடியும்.

  • ஆனால், நோட்டின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் மதிப்பு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • வாடிக்கையாளர்களின் வசதிக்காக, மத்திய ரிசர்வ் வங்கி இதற்கான சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

  • ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஒரு வாடிக்கையாளர் சிதைந்த ரூபாய் நோட்டை வங்கிக்கு எடுத்துச் சென்றால், அந்த நோட்டில், காந்திஜியின் படம், ஆர்பிஐ கவர்னரின் கையெழுத்து, வாட்டர்மார்க் மற்றும் வரிசை எண் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறதா என்பதை வங்கி முதலில் சரிபார்க்கிறது. இவை அனைத்தும் இருந்தால், இதற்குப் பிறகு, நோட்டை மாற்ற வங்கி மறுக்க முடியாது.

  • உங்களிடம் 5, 10, 20 மற்றும் 50 ரூபாய் போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் இருந்து, அவற்றில் மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தெரியும் வகையில் இருந்து, அதன் ஒரு பகுதியேனும் நன்றாக இருந்தால், அந்த நோட்டை வங்கியில் இருந்து எளிதாக மாற்றலாம்.

கட்டணம் உண்டு

  • மறுபுறம், உங்களிடம் 20 க்கும் மேற்பட்ட கிழிந்த நோட்டுகள் இருந்து, அவற்றின் மதிப்பு 5000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

  • கட்டணம் செலுத்திய பிறகு வங்கி ரூபாய் நோட்டை மாற்றும்.

    துண்டாக கிழிந்த நோட்டுகளையும் மாற்ற முடியும்

  • பல முறை நோட்டுகள் துண்டு துண்டாகக்கூட கிழிந்து விடுகின்றன. அப்படி கிழ்ந்திருந்தாலும், அவற்றை மாற்ற முடியும்.

  • ஆனால், இதற்கு இந்த ரூபாய் நோட்டின் துண்டுகளை அருகில் உள்ள ரிசர்வ் வங்கியின் கிளைக்கு அனுப்ப வேண்டும்.

  • இதனுடன், வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி குறியீடு மற்றும் நோட்டின் மதிப்பு ஆகியவற்றை எழுதி அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க...

பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கால்சியம் குறைபாடு!

பிச்சை எடுத்து அன்னதானத்திற்கு ரூ1 லட்சம் நிதி- பிரமிப்பூட்டிய பாட்டி!

 

English Summary: How to replace a torn rupee note?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.