சுவிட்சர்லாந்து நாட்டின் இன்டர்லேக்கன் பகுதியில் IFAJ 2024 (International Federation of Agricultural Journalists- IFAJ) மாநாடு சிறப்பாக தொடங்கி நடைப்பெற்று வருகிறது. மாநாட்டின் சிறப்பு நிகழ்வுகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு-
68-வது IFAJ மாநாட்டின் முக்கிய நோக்கமானது, மதிப்புமிக்க வேளாண் நுண்ணறிவுகளை வழங்குவதோடு, உலகளாவிய விவசாயத்தின் எதிர்காலத்தில் புதுமை மற்றும் நிலைத்தன்மையின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகும்.
33 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு:
68-வது IFAJ 2024 மாநாடு ஆகஸ்ட் 14, 2024 அன்று சுவிட்சர்லாந்தின் அழகான நகரமான இண்டர்லேக்கனில் தொடங்கியது. இந்நிகழ்வு வருகிற ஆகஸ்ட் 18, 2024 வரை நடைப்பெற உள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க ஆறு கண்டங்களில் உள்ள 33 நாடுகளில் இருந்து 267 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாடானது நிலப்பரப்பளவில் சிறிய அளவாக இருந்தபோதிலும், சமவெளிகள் மற்றும் மலைப்பகுதிகளில் பெரிய அளவிலான பல்வேறு வகையான விவசாய நடைமுறைகளைக் கொண்டுள்ளது. ஹோட்டல் மெட்ரோபோலில் மாநாடு பிரதிநிதிகளின் பதிவுடன் தொடங்கியது. மாநாடு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ரோலண்ட் வைஸ்-ஏர்னி, விவசாயப் பத்திரிகையாளர்களின் சுவிஸ் கில்ட் (SAJ) தலைவர் கிர்ஸ்டன் முல்லர் மற்றும் விவசாய அமைச்சர் கை பார்மெலின் ஆகியோர் வரவேற்பு உரை நிகழ்த்தினர்.
சிறப்பு கருத்தரங்கு நிகழ்வுகள்:
வேளாண்மைக்கான மத்திய அலுவலகத்தின் (FOAG) இயக்குநர் கிறிஸ்டியன் ஹோஃபர், ‘சுவிட்சர்லாந்து உணவு வழங்கல் மற்றும் நிலைத்தன்மை’ குறித்து சிறப்புரையாற்றினார். ‘சுவிஸ் விவசாயிகள் சமூகத்தின் உயர் எதிர்பார்ப்புகளை எவ்வாறு சமாளிப்பது?’ என்ற தலைப்பில் சுவிஸ் விவசாயிகள் சங்கத்தின் (SFU) துணைத் தலைவர் ஃபிரிட்ஸ் கிளாசர் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து, ‘நுகர்வோர் மற்றும் இயற்கையின் தேவைகள் என்ன?’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், வேளாண்மை பேர்ட்லைஃப் சுவிட்சர்லாந்தின் திட்ட மேலாளர் ஜோனாஸ் ஷேல், ரோமண்டே டெஸ் கன்சோமேச்சர்ஸ் எஃப்ஆர்சியின் தலைவர் கிறிஸ்டோப் பார்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 'நெஸ்லே - உலக சந்தைக்கான மறுஉருவாக்கம் நடைமுறைகள்' மற்றும் 'சின்ஜெண்டா: சீரான நிலைத்தன்மை மற்றும் உற்பத்தித்திறன்' குறித்து அந்நிறுவன பிரதிநிதிகள் தங்கள் நுண்ணறிவைப் பகிர்ந்து கொண்டனர்.
அவர்களின் உரையாடல் விவசாயத்தின் எதிர்காலம், தொழில்நுட்ப பங்கு மற்றும் மறுஉற்பத்தி நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு உணவளிப்பதில் உள்ள சவால்களை நிலையாக எதிர்கொள்ள மதிப்பு சங்கிலி ஒத்துழைப்பு, ஆராய்ச்சியில் முதலீடு மற்றும் ஆதரவான கொள்கைகளின் முக்கியத்துவத்தை அவர்கள் தங்கள் உரையின் போது வலியுறுத்தினர்.
இதற்கிடையில், உலகம் முழுவதும் உள்ள விவசாய ஊடகவியலாளர்கள் மூன்று நாள் தொழில்முறை மேம்பாட்டுப் பட்டறையில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் மற்ற விவரங்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கிரிஷி ஜாக்ரன் வலைத்தளத்தினை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
Read more:
Kisan Ki Baat - விவசாயிகளுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்ட ஒன்றிய அமைச்சர்!
தொடர் கனமழை- தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
Share your comments