1. மற்றவை

தினமும் ரூ.45 முதலீடு- ரூ.25 லட்சம் சம்பாதிக்க சூப்பர் வழி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

இன்றைய சேமிப்புதான் நாளைய பாதுகாப்பு. இதனைக் கருத்தில்கொண்டே, எதிர்காலத்திற்கான சேமிப்பு என்பதே நமது மாதத்தின் முதல் செலவாக இருக்கட்டும் என்றும் நம் முன்னோர்கள் கூறுவார்கள்.

பாடம் புகட்டிய வைரஸ்

அவ்வாறு எதிர்காலத்திற்காக சேமிக்கத் தவறியவர்கள், கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் பலவித இன்னல்களை எதிர்கொண்டனர்.  ஆக, கொரோனா வைரஸ், எதிர்கால சேமிப்பு என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லிச் சென்றது.

முதலீடு

எனவே இனிவரும் நோய்காலங்களில் சிக்கலில் இருக்காமல் இருக்க  ஏதுவாக சேமிக்க வேண்டும் என நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குதான்.

எல்ஐசியின் இந்த பாலிசியை நீங்கள் எடுத்தால் நாள் ஒன்றுக்கு 45 ரூபாய் முதலீடு செய்து 25 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.அதாவது இந்த பாலிசியில் ஒரு நாளைக்கு ரூ.45 டெபாசிட் செய்தால் விரைவில் ரூ.25 லட்சத்தை திரும்பப் பெறலாம். இந்த பாலிசியின் பெயர் எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி. 45 ரூபாயை சேமிப்பது என்பது இன்றைய காலத்தில் மிகவும் எளிதான ஒன்றுதான்.

ஆவணங்கள்

இந்த பாலிசியின் கீழ் நீங்கள் பயன்பெறுவதற்கு உங்களிடம் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு இருந்தால் இந்த திட்டத்திற்கு மிக எளிதாக விண்ணப்பிக்கலாம். இந்த பாலிசியில் முதலீடு செய்வது மிகவும் எளிதானது. இதன் காரணமாக, சாலையோர தொழில்முனைவோர், கூலித் தொழிலாளர்கள், ரிக்‌ஷா ஓட்டுபவர்களும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

பயன்கள் 

பாலிசி நடைமுறையில் இருந்து, அதே நேரத்தில் பாலிசிதாரர் இறந்தால் நாமினிக்கு 125 சதவீதம் வருமானம் கிடைக்கும். இது தவிர, இந்த பாலிசியில் போனஸின் பலனையும் பெறுவீர்கள். இந்த எல்ஐசி திட்டத்தில் ரூ.1 லட்சம் காப்பீட்டுத் தொகை உள்ளது.

45 ரூபாய் போதும்!

இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.25 லட்சம் பெற வேண்டுமானால், தினமும் ரூ.45 சேமிக்க வேண்டும். இதன் மூலம் மாதம் ரூ.1358 சேமிப்பீர்கள். 35 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் படி, நீங்கள் வருடத்திற்கு 16,300 ரூபாய் முதலீடு செய்வீர்கள். இந்த வழியில் நீங்கள் தொடர்ந்து 35 ஆண்டுகள் முதலீடு செய்வீர்கள். கடைசியில் உங்களிடம் சுமார் 25 லட்சம் ரூபாய் நிதி இருக்கும்.

மேலும் படிக்க…

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்- விவசாயிகளின் பரிதாப நிலை!

ஒரு லட்சம் ரூபாய் பைக்கிற்கு, ஒரு கோடி ரூபாய்க்கு நம்பர் பிளேட்!

English Summary: Investing Rs 45 Every Day- Super way to earn Rs 25 lakh!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.