1. மற்றவை

ATM போனாலே அபராதம் தான்: பொதுமக்களே உஷார்!

R. Balakrishnan
R. Balakrishnan
ATM Charges

வங்கிகளில் பணம் போடுகிறோம், பணம் எடுக்கிறோம் என்பதையும் தாண்டி வங்கி வாடிக்கையாளர்களிடம் பல்வேறு கட்டணங்கள், அபராதம் போன்றவை வசூலிக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான கட்டணங்கள் குறித்து எளிய மக்களுக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை.

ஏடிஎம் கட்டணம் (ATM charges)

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாத சூழலில், ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்றாலோ, ஷாப்பிங் செய்துவிட்டு ஸ்வைப்பிங் மெஷினில் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்த முயன்றாலோ, உங்களுக்கு Decline charge எனப்படும் கட்டணம் வசூலிக்கப்படும். முன்னணி வங்கிகள் இதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கின்றன என்பதை பார்க்கலாம்.

எஸ்பிஐ

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (State Bank of India) வாடிக்கையாளர் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்றால் 20 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டி வசூலிக்கிறது.

எச்டிஎஃப்சி வங்கி

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) பணம் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்றால் 25 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கிறது.

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி (IDBI Bank) 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.

ஆக்ஸிஸ் வங்கி

தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank) 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.

Yes Bank

தனியார் வங்கியான யெஸ் வங்கி (YES Bank) 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.

கோட்டக் மஹிந்த்ரா வங்கி

தனியார் வங்கியான கோட்டக் மஹிந்த்ரா வங்கி (Kotak Mahindra Bank) 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகிய வங்கிகளும் இந்த வங்கியின் கீழ் வருவதால் அந்த வாடிக்கையாளர்களுக்கும் இதே கட்டணம் பொருந்தும்.

பாங்க் ஆஃப் பரோடா

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய வங்கிகளுக்கும் இதே கட்டணம் பொருந்தும்.

பாங்க் ஆஃப் இந்தியா

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் இந்தியா (Bank of India) 20 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டி வசூலிக்கிறது.

அபராதத்தை தவிர்க்க இதை செய்யலாம்

மேற்கூறியபடி, வங்கி கணக்கில் பணம் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சிக்கும்போது அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு, வங்கி கணக்கில் மொபைல் ஆப், யூபிஐ ஆப் வாயிலாக இருப்பு தொகையை தெரிந்துகொண்டு ஏடிஎம்மில் பணத்தை எடுக்கலாம். இதன் மூலம் வீண் அபராத செலவுகளை தவிர்க்கலாம்.

மேலும் படிக்க

பயிற்சியை முடித்தவுடன் வேலைவாய்ப்பு! அரசின் அருமையான திட்டம் இதோ!

இரயில் மூலம் பார்சல் சேவை: இந்திய தபால் துறை தொடக்கம்!

English Summary: Just going to the ATM is a fine: public beware! Published on: 18 January 2023, 08:46 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.