MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் இன்று, ராஜஸ்தானில் விவசாயிகளின் பங்கேற்புடன் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
ராஜஸ்தானின் சிகார், பல்சானாவில் உள்ள ரிதி சித்தி கார்டனில் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிதியுதவி பங்களிப்போடு, 'வளமான இந்தியாவிற்கான பாதையில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது' என்ற கருப்பொருளில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. தனுகா அக்ரிடெக், ICAR-யும் இந்த நிகழ்விற்கு தங்களது ஆதரவினை வழங்கியிருந்தனர்.
நிலக்கடலை சாகுபடி குறித்து விளக்கம்:
டாக்டர் ஜிதேந்தர் அகர்வால், கேவிகே விஞ்ஞானி (தாவர பாதுகாப்பு), டாக்டர் மயங்க், தோட்டக்கலை அலுவலர் டாக்டர் லாலாராம், கேவிகே விஞ்ஞானி டாக்டர் மணீஷ் ஆகியோர் நிகழ்வின் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பண்ணை வருமானத்தை அதிகரிப்பது குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை விவசாயிகளுடன் வல்லுநர்கள் பகிர்ந்து கொண்டனர்.
தனுகாவின் துணைப் பொது மேலாளர் (ஜோத்பூர்) மனு பகதூர், நிலக்கடலை சாகுபடிக்கு மைகோர் சூப்பரின் பல நன்மைகளைப் பற்றி விவரித்தார் . நிகழ்வின் இறுதியாக, பல முற்போக்கு விவசாயிகளுக்கு அவர்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் MFOI நிகழ்வு குறித்தும், அதில் இடம்பெற்றுள்ள விருதுகளின் பிரிவுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மஹிந்திரா டிராக்டர் நிறுவனம் தனது சமீபத்திய டிராக்டர் மாடல்களை விவசாயிகளுக்கு இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
MFOI 2024- விண்ணப்பங்கள் வரவேற்பு:
வேளாண்துறை சார்ந்து கடந்த 26 ஆண்டுகளாக ஊடகவியல் துறையில் இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்ச்சர் வேல்ர்ட் இணைந்து வேளாண் துறையில் அதிதீவிரமாக செயல்படுவதோடு நல்ல வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI (millionaire farmer of India) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தனர்.
MFOI 2023- நிகழ்வினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3,2024 வரை டெல்லியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கீழ்க்காணும் இணைப்பு மூலம் விருதுக்கு உங்கள் பெயரையோ/ மற்ற விவசாயிகளின் பெயரையோ பரிந்துரை செய்யலாம்.
Read more:
ஊடுபயிராக பசுந்தீவன பயிர்- ஏக்கருக்கு ரூ.3000 அரசு மானியம்!
சொர்ணவாரி நெல் மற்றும் கம்பு பயிருக்கு பயிர் காப்பீடு- இறுதித்தேதி அறிவிப்பு!
Share your comments