1. மற்றவை

6 Jio பிளான்கள் மீது சிறப்பு தள்ளுபடி! அம்பானியின் அதிரடி அறிவிப்பு!

T. Vigneshwaran
T. Vigneshwaran

Reliance Jio Plan

ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான ரீசார்ஜ் சலுகையை அறிவித்துள்ளது.

இந்த புதிய சலுகையின் ஒரு பக்கமாக, ஜியோ நிறுவனம் ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு Buy 1 Get 1 Free தள்ளுபடியை, அதாவது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்கிற ஆபரை அனைத்து JioPhone திட்டங்களிலும் வழங்கி வருகிறது.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் சலுகையின் மூலம், பயனர்கள் ஒவ்வொரு JioPhone திட்டத்திலும், ரீசார்ஜ் செய்யப்பட்ட அதே மதிப்பில் கூடுதல் ரீசார்ஜ் பிளானையும் இலவசமாகப் பெறுவார்கள்.

உதாரணமாக, ரூ.39 பிளானுடன் ரீசார்ஜ் செய்தால், அதே ரூ.39 பிளான் அவர்கள் இலவசமாகப் பெறுவார்கள். அதாவது ரூ.39 ரீசார்ஜ் செய்தால், பயனர்கள் வழக்கமாக 14 நாட்கள் செல்லுபடி மற்றும் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எம்பி டேட்டா போன்ற நன்மைகளை பெறுவார்கள். இந்த பிளான் வாங்கினால் ஒன்று இலவசம் என்கிற சலுகையுடன், அணுக கிடைக்கும் அனைத்து நன்மைகளுடனும் 14 நாட்கள் என்கிற செல்லுபடி 28 நாட்களாக நீட்டிக்கப்படும்.

எந்தெந்த ஜியோபோன் திட்டங்களின் கீழ் JioPhone Buy 1 Get 1 Free ஆபர் கிடைக்கும், இதோ முழு பட்டியல்:

ஜியோ நிறுவனம் இதை BOGO சலுகை என்று அழைக்கிறது மற்றும் ஜியோ போன் ரூ.39 முதல் ரூ.185 வரை மொத்தம் ஆறு பிளான்களின் கீழ் இந்த சலுகை கிடைக்கும்.

ரூ.39 ஜியோபோன் ரீசார்ஜ் பிளான் மற்றும் போகோ சலுகை:

ரூ.39 ஜியோபோன் ரீசார்ஜ் பிளான் 14 நாட்கள் செல்லுபடியாகும், ஒரு நாளைக்கு 100 எம்பி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பை வழங்குகிறது. போகோ சலுகையின் கீழ் பயனர்கள் கூடுதலாக ஒரு ரூ.39 பிளானை இலவசமாகப் பெறுவார்கள்.

ரூ.69 ரூபாய் ஜியோபோன் ரீசார்ஜ் பிளான் மற்றும் போகோ சலுகை:

இந்த திட்டம் தினம்தோறும் 500MB டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 14 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்துடன் இலவச எஸ்எம்எஸ் நன்மைகள் கிடையாது. இந்த திட்டத்தின் மூலம், பயனர்கள் போகோ சலுகையின் ஒரு பகுதியாக ரூ.69 திட்டத்தை இலவசமாகப் பெறுவார்கள்

ரூ.75 ரூபாய் ஜியோபோன் ரீசார்ஜ் பிளான் மற்றும் போகோ சலுகை:

ரூ.75 ப்ரீபெய்ட் ஜியோபோன் பிளான் 28 நாட்கள் செல்லுபடியாகும். கூடுதலாக, மொத்தம் 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பை வழங்குகிறது. இதிலும் BOGO சலுகை பொருந்தும் மற்றும் பயனர்கள் ரூ.75 பிளானை இலவசமாகப் பெறுவார்கள்.

ரூ.125 ஜியோபோன் ரீசார்ஜ் பிளான் மற்றும் போகோ சலுகை:

இந்தத் திட்டத்தில் 500 எம்பி டெய்லி டேட்டா, வரம்பற்ற கால்ஸ் மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த பிளானுடன் BOGO சலுகையும் பொருந்தும்.

ரூ.155 ஜியோபோன் ரீசார்ஜ் பிளான் மற்றும் போகோ சலுகை:

இது இரண்டாவது விலையுயர்ந்த ஜியோபோன் திட்டம் ஆகும் மற்றும் இது 28 நாட்கள் செல்லுபடியாகும், 1 ஜிபி தினசரி டேட்டா வரம்பு மற்றும் வரம்பற்ற அழைப்புடன் கிடைக்கிறது. போகோ சலுகை மூலம் பயனர்கள் ரூ155 கூடுதல் ரீசார்ஜ் பிளானை இலவசமாகப் பெறுவார்கள்.

ரூ.185 ஜியோபோன் ரீசார்ஜ் பிளான் மற்றும் போகோ சலுகை:

இதில் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் ரீசார்ஜ் செய்த நாளிலிருந்து 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதும் போகோ சலுகையுடன் வருகிறது.

மேலும் படிக்க:

தமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடையாது? கர்நாடக முதல்வரின் உத்தரவு!

அனைவருக்கும் இலவசம்: Free Wi-Fi தெற்கு ரயில்வேயின் ஏற்பாடுகள் !

English Summary: Special Discounts on 6 Jio Plans! Ambani's Action Announcement!

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.