The teacher who renovated the school on the eve of his birthday!
ஆலங்குடி அருகே மேற்பனைக்காடு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர், தன் பிறந்த நாளில் பள்ளியை சீரமைத்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. பொதுவாக அரசுப் பள்ளிகளில் வசதிகள் குறைவாக இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தனது பிறந்த நாளில் பள்ளியை சீரமைக்கும் நல்ல விசயத்தில் ஈடுபாடு காட்டியுள்ளார்.
ஆசிரியரின் செயல் (Teacher's Action)
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, மேற்பனைக்காடு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணி புரிபவர் சதீஷ்குமார், 40. நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளியில் உள்ள வகுப்பறைக்கு, புதிதாக வண்ணம் தீட்டி, இருக்கை வசதி, ஸ்மார்ட் 'டிவி' போன்றவற்றை, 1 லட்சம் ரூபாய் செலவில் செய்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்த பள்ளிக்கு பணி மாறுதலில் வந்த அவர், ஏற்கனவே 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சுற்றுச்சுவரை சீரமைத்தார்.
நண்பர்கள் உதவியுடன், 75 ஆயிரம் ரூபாய் செலவில், பள்ளி கழிப்பறையையும் புனரமைத்துள்ளார். திருச்சி, கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறு அரசு பள்ளிகளுக்கு, 6 லட்சம் ரூபாயை, வெளிநாடு வாழ் நண்பர்களிடம் நன்கொடையாக பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஆசிரியரின் இந்த நற்செயல், பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், மற்ற ஆசிரியர்களுக்கு இவர் நல்ல முன்னுதாரணமாக திகழ்கிறார்.
மேலும் படிக்க
டி.சி.,யில் இடம்பெறுகிறது மாணவர்களை நீக்கிய காரணம்: அமைச்சர் மகேஷ்!
மக்கள் தொகை கணக்கெடுப்பில் மின்னணு முறை: மத்திய அரசின் சிறப்பான முடிவு!
Share your comments