அபிஷேக் தியாகி தனது விவசாய பணியில் மஹிந்திரா அர்ஜுன் 605 DI டிராக்டர் மூலம் உற்பத்தி மற்றும் செயல்திறனை அதிகரித்துள்ளார். அவரது வெற்றிக் கதை நவீன விவசாய தொழில் நுட்பங்களையும், கருவிகளையும் பயன்படுத்த மற்றவர்களை ஊக்குவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த முற்போக்கு விவசாயி அபிஷேக் தியாகி , விவசாயத்தை தனது வாழ்வாதாரமாக மாற்றியது மட்டுமல்லாமல், மற்ற விவசாயிகளையும் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றி அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க ஊக்குவிக்கும் ஒரு எழுச்சியூட்டும் கதையை உருவாக்கியுள்ளார். கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் மஹிந்திரா அர்ஜுன் 605 டிஐ டிராக்டரின் குறிப்பிடத்தக்க பங்கின் விளைவாக அவரது வெற்றி , அவரது விவசாய பணியினை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
வெற்றிக்கு வித்திட்ட மஹிந்திரா:
அபிஷேக் தியாகிக்கு 20 பிகாஸ் அளவில் வளமான நிலம் உள்ளது. அங்கு அவர் கரும்பு, கோதுமை மற்றும் நெல் பயிரிடுகிறார். பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், அவர் எப்போதும் புதிய தொழில்நுட்பங்களையும் நவீன உபகரணங்களையும் தழுவுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அந்த வகையில் தான் மஹிந்திரா அர்ஜுன் 605 DI டிராக்டரினை பயன்படுத்த தொடங்கினார். அவரது விவசாய பணியில் மஹிந்திரா டிராக்டரின் வருகை வெற்றிக்கு வித்திட்டது மட்டுமல்லாமல் அவரது உற்பத்தி விளைச்சலையும் செயல்திறனையும் அதிகரிக்க உதவியுள்ளது.
மஹிந்திரா அர்ஜுன் 605 DI: விவசாயிகளின் நம்பிக்கை
மஹிந்திரா அர்ஜுன் 605 DI டிராக்டர் தனது விவசாய அனுபவத்தை எப்படி மாற்றியது என்பது குறித்து அபிஷேக் கூறுகையில், “அதன் சக்தி மற்றும் செயல்திறன் சவாலான பணிகளை மிகவும் எளிதாக்கியது. மகேந்திரா அர்ஜுன் 605 DI- யின் மூன்று விதமான அமைப்பு எனது விவசாயத்தை முற்றிலும் மாற்றியது. இப்போது, நான் 17-18 மணிநேரம் எந்த தொந்தரவும் இல்லாமல் வயல்களில் வேலை செய்ய முடியும்" என்றார்.
மஹிந்திரா அர்ஜுன் 605 DI உடன், அபிஷேக் தனது நிலத்தின் பயன்பாட்டை அதிகப்படுத்தினார். அவரது கரும்பு மற்றும் நெல் விளைச்சல் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியது. இது அவரது வருமானத்தை உயர்த்தியது. ”டிராக்டரின் டீசல் சேவர் பயன்முறை எரிபொருள் செலவைக் குறைத்தது, அதே சமயம் பவர் அமைப்பு முறை உழுதல் மற்றும் இழுத்தல் போன்ற கடினமான பணிகளுக்கு உதவியது” என்றார்.
எதிர்க்காலத் திட்டம்:
அபிஷேக் தனது விவசாயத்தை மேலும் நவீனமயமாக்க ஆர்வமாக உள்ளார் மேலும் மற்ற விவசாயிகளையும் இதே போன்ற தொழில்நுட்பங்களையும் கருவிகளையும் பின்பற்ற ஊக்குவிக்கிறார். இதுக்குறித்து அவர் கூறுகையில், "மகேந்திரா அர்ஜுன் 605 DI எனது முயற்சிகளை வலுப்படுத்தியது மற்றும் எனது கனவுகளை நனவாக்க உதவியது” எனத் தெரிவித்துள்ளார்.
கடின உழைப்பு, நவீன தொழில்நுட்பம் மற்றும் சரியான கருவிகள் மூலம் விவசாயத்தினை லாபகரமானதாக மாற்றலாம் என்பதை அபிஷேக் தியாகியின் கதை நிரூபிக்கிறது . மஹிந்திரா அர்ஜுன் 605 DI டிராக்டர் அவரது வெற்றிப் பயணத்தில் தவிர்க்க முடியாத வெற்றிக் காரணியாக மாறியுள்ளது என்றால் மிகையல்ல.
Read more:
நெற்பயிருக்கான உரம் டூ கால்நடை தீவனம்: அசோலாவின் தன்மை என்ன?
cattle feed Azolla: அசோலா வளர்ப்புக்கு ஏற்ற சூழ்நிலைகள் என்ன?
Share your comments