1. வெற்றிக் கதைகள்

கிருஷி ஜாக்ரனின் மாபெரும் வேளாண் திருவிழா - ''FTB Mahotsav 2020''வைப் பார்த்து பயனடையுங்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Benefit from Krishi Jagran's Great Agricultural Festival - '' FTB Mahotsav 2020 ''!

விவசாய நாடு என வருணிக்கப்படும் இந்தியாவில் விவசாயி இல்லாமல் எதுவும் இல்லை என்பதே, கொரோனா நெருக்கடிக் காலம் நமக்கு உணர்த்திச் சென்ற பாடம். நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பதன் மூலம் வளர்ச்சிக்கும் வித்திடுகிறார்கள் விவசாயிகள். ஆனால், அவர்களது வாழ்வு அந்த அளவுக்கு பளிச்சிடுவதில்லை.

அரும்பாடுபட்டு பயிரை வளர்க்கத் தெரிந்த விவசாயிகளுக்கு, அதனை சரியாக சந்ததைப்படுத்த முடியவில்லை. இதனைப் பயன்படுத்திக்கொண்டு இடையில் கொள்ளை லாபம் பார்த்துவிடுகிறார்கள் இடைத்தரகர்கள். ஆக நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தின், பிரம்மாக்களான விவசாயிகளின் மேம்பாட்டிற்காக, கடந்த 25 ஆண்டுகளாக தன்னை அர்ப்பணித்து வருகிறது கிருஷி ஜாக்ரன் (Krishijagran) பத்திரிகை.

கிருஷிஜாக்ரன் (Krishijagran)

விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள், அதனை எதிர்கொள்ளத் தேவையான வழிகாட்டுதல்கள், அரசாங்கத்தின் அறிவிப்புகள், அதனை பெறுவதிற்கான வழிமுறைகள் என அனைத்து வழிகளிலும் விவசாயிகளை அரவணைத்துச் செல்வதோடு, அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பாலமாகத் திகழ்கிறது.

தன்னுடைய இலக்கை அடையும் வரை போராடும் விதமாக, தன்னிறைவு அடைந்த, முன்னணி விவசாயிகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, அவர்கள் தங்கள் பொருட்களை இடைத்தரகர் இல்லாமல், சந்தைப்படுத்த உதவும் முயற்சியை முன்னெடுத்து வருகிறது கிருஷி ஜாக்ரன். இதற்காக ஞாயிறு தோறும், கிருஷி ஜாக்ரனின் ''Farmer the brand'' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஒரு விவசாயி மட்டுமே பங்கேற்கும் நிலையில், அடுத்த கட்டமாக ஒரே நேரத்தில் 10 விவசாயிகளை பங்கேற்க வைக்கும் விதமாக மாதாந்திர வேளாண் திருவிழா கடந்த மாதம் முதல் தொடங்கப்பட்டது.

முதல் நிகழ்ச்சியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து 2வது மாதாந்திரத்திருவிழா வரும் 4ம் தேதி அதே உத்வேகத்துடன் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10 விவசாயிகள் தங்களின் வெற்றியின் ரகசியம் குறித்து அனைவரிடத்திலும் மனம் திறந்து பகிர்ந்துகொள்கின்றனர்.

பங்கேற்கும் விவசாயிகள்

ராஜா மாணிக்கம், தமிழ்நாடு  (Raja Manickam, Tamil Nadu)

அஜிங்யா ஹன்ஞ், மகாராஷ்டிரா (Ajinkya Hange, Maharashtra)

யாஷ் ஜெயந்திபாய் பாதியர், குஜராத் (Yash JayantibhaiPadhiyar, Gujarat)

கன்வல் சிங் சவுஹான், ஹரியானா (Kanwal Singh Chauhan, Haryana)

அர்பிந்த் சிங் டாட், பஞ்சாப் (Arbind Singh Dhoot, Punjab)

ஆனந்த் மிஸ்ரா, உத்தரபிரதேசம் (Anand Mishra, Uttar Pradesh)

சதேனஹல்லி குமாரசுவாமி, கர்நாடகா  (Sathenahalli Kumaraswamy, Karnataka)

ஜி.ஆர். ஷாஜி, கேரளா (Shaji GR, Kerala)

பிரதர் வீர் ஷெட்டி பாட்டீல், தெலங்கானா (Biradhar Veer Shetty Patil, Telangana)

அருண் மன்டல், மேற்கு வங்கம் (Arun Mandal, West Bengal)

இந்த நிகழ்ச்சியை மற்ற விவசாயிகள் பேஸ்புக் மூலம் கண்டுகளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் படிக்க...

நஷ்டம் இல்லாத விவசாயத்திற்கு வழிவகுக்கும் துணைத் தொழில்கள் - ஒருங்கிணைந்த இயற்கை பண்ணையத்தின் வெற்றி ரகசியம்!

இயற்கை விவசாயம் செய்ய நீங்க ரெடியா? கைகொடுக்கிறது விஜய் ஆர்கானிக்ஸ்!

English Summary: Benefit from Krishi Jagran's Great Agricultural Festival - '' FTB Mahotsav 2020 ''!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.