தற்போதைய காலத்தில் வேளாண் பணிகளை இயந்திரமயமாக்கலை நோக்கி நகர்த்துவது அவசியமாகியுள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் வேளாண் பணிகளை திறம்பட கையாளும் வகையில் டிராக்டர்களை தயாரித்து வருகின்றனர். 60 ஆண்டுகளை கடந்தும் விவசாயிகளின் நம்பிக்கைக்குரியதாக விளங்கும் மஹிந்திரா டிராக்டரினை பயன்படுத்தி விவசாயத்தில் வெற்றிப் பாதையில் பயணிக்கும் குர்மேஜ் சிங்கின் கதை தான் இந்த கட்டுரை.
குர்மேஜ் சிங் விவசாயத்தில் லாபகரமான முறையில் இயங்கி வருவது, அவரது விவசாய அர்ப்பணிப்பு உணர்வையும், சரியான கருவிகளுடன் வேளாண் பணிகளை அணுகுவதையும் எடுத்துக்காட்டுகிறது. மஹிந்திராவின் அர்ஜுன் நோவோ டிராக்டர் தனது விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
மாற்றத்தை உண்டாக்கிய மஹிந்திரா அர்ஜுன் நோவோ:
ஹரியானாவைச் சேர்ந்த முற்போக்கு விவசாயி குர்மேஜ் சிங் , மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI 4WD டிராக்டரினை தனது வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். இந்த டிராக்டரின் சக்திவாய்ந்த எஞ்சின், எரிபொருள் திறன் ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு பணியையும் எளிதாக மேற்கொள்ள முடிகிறது என்கிறார் குர்மேஜ் சிங். ”மஹிந்திரா டிராக்டர் எனது வெற்றிப் பங்காளி” என்று பெருமையுடன் கூறும் அளவிற்கு அவரின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கியுள்ளது மஹிந்திரா டிராக்டர்.
ஹரியானாவின் யமுனா நகர் மாவட்டத்தைச் சேர்ந்த குர்மேஜ் சிங், விவசாயத்தில் தனது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்குப் பெயர் பெற்றவர். தன்னிடமுள்ள 18-19 பிகாஸ் நிலத்தில் வேளாண் பணிகளை 2-3 டிராக்டர்கள் மூலம் திறம்பட செய்து வருகிறார். அவரது மதிப்புமிக்க உடைமைகளில் மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI 4WD டிராக்டரும் உள்ளது.
குர்மேஜ் சிங் பல ஆண்டுகளாக மஹிந்திரா டிராக்டரினை பயன்படுத்துகிறார். ஆனால் அவர் அர்ஜுன் நோவோ 605 DI 4WD-ஐ வாங்கியபோது அவருக்கு இன்னும் பலன் கிடைத்துள்ளது. இதுக்குறித்து அவர் கூறுகையில், “மகேந்திரா அர்ஜுன் நோவோ எனது விவசாயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் எளிதாக்கியுள்ளது. அதன் சக்தி, எரிபொருள் திறன் மற்றும் எளிதில் மாற்றத்தக்க கியர்கள் ஆகியவை அதை என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. உழவு பணி, பாசனத்திற்கு தண்ணீர் எடுப்பது அல்லது பயிர்களைக் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது என எதுவாக இருந்தாலும், இந்த டிராக்டர் ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்புகளையும் மீறி சிறப்பாக செயல்பட உதவுகிறது.”
"இதன் நான்கு சக்கர டிரைவ் சிஸ்டம் இதை இன்னும் சிறப்பானதாக்குகிறது. இது கடினமான பணிகளிலும் சிரமமின்றி வேலை செய்கிறது. எரிபொருள் சேமிப்பில் மஹிந்திரா அர்ஜுன் நோவோ ஆச்சரியமூட்டுகிறது. இதனால் உற்பத்திச் செலவுகள் வெகுவாக குறைந்து லாபம் பெருகியுள்ளது. " என்கிறார் குர்மேஜ்.
தனித்து விளங்கும் மஹிந்திரா:
குர்மேஜ் சிங் மற்ற பிராண்டுகளின் 2-3 டிராக்டர்களை வைத்திருந்தாலும், மற்ற டிராக்டர்களை விட மஹிந்திரா ஓட்டும் அனுபவம் அளப்பரியது என்கிறார். இதுக்குறித்து அவர் குறிப்பிடுகையில், "மகேந்திரா டிராக்டரை ஓட்டுவது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதன் தொழில்நுட்பமும், வசதியும் மற்ற டிராக்டர்களில் இருந்து அதை வேறுபடுத்துகிறது. நான் எனது பண்ணைகளை மேற்பார்வையிடுவதைத் தவிர, தானே வயல்களில் வேலை செய்து வருகிறேன். அதற்கு காரணம் மஹிந்திரா டிராக்டரினை ஓட்டுவதும் தான்” என புன்னகைக்கிறார்.
Read also: மானியத்தில் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவி
மஹிந்திரா அர்ஜுன் நோவோவின் உதவியுடன், குர்மேஜ் தனது பண்ணையின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கியுள்ளார். அவரது பண்ணைகள் இப்போது மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நவீன விவசாய முறைகளுடன் இயங்கி வருகின்றனர் . எதிர்காலத்தில் மஹிந்திராவை தனது நம்பகமான கூட்டாளியாகக் கொண்டு குர்மேஜ் தனது பண்ணைகளை முழுமையாக இயந்திரமயமாக்க திட்டமிட்டுள்ளார்.
சக விவசாயிகளுக்கு ஒரு செய்தி:
குர்மேஜ் சிங் மற்ற விவசாயிகளுக்கு ஒரு செய்தியினை பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு: "மஹேந்திரா அர்ஜுன் நோவோ எனது விவசாயத்திற்கு ஒரு புதிய திசையை அளித்துள்ளது. இந்த டிராக்டர் ஒவ்வொரு விவசாயிக்கும் வெற்றிகரமான பங்காளியாக இருக்கும் என எனது அனுபவத்தின் வாயிலாக கூறுகிறேன். மஹிந்திரா டிராக்டர்கள் விவசாயிகளின் கடின உழைப்புக்கு உண்மையான துணையாக நிற்கின்றன. விவசாயிகள் தங்களது கனவை சரியான இயந்திரங்களுடன் நிஜமாக்க முடியும் என்பதற்கு நானேச் சான்று” எனத் தெரிவித்துள்ளார்.
Read more:
கோமாரி நோய்க்கான தடுப்பூசி: கால்நடை விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுக்கோள்
ரபி பருவ பயிர்களுக்கான காப்பீடு- ஆட்சியர் விவசாயிகளுக்கு வேண்டுக்கோள்
Share your comments