கன்னியா குமரி மாவட்டத்தில், இயற்கை வள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் (Natural Resources Development Project-NARDEP) பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4வது சனிகிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு அளிக்கப்படும் அனைத்து பயிற்சிகளும் இயற்கை வளத்தை மையப்படுத்தி கிராம புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது.
சுற்றுச்சூழலுக்கும், பிற உயிரினங்களுக்கும் கேடு ஏற்படுத்தாத இயற்கை உரங்களான மண்புழு உரம், அங்கக உரங்கள் தயாரிப்பது குறித்த ஒரு நாள் பயிற்சி அளிக்கப் பட உள்ளது. அதே போன்று வீட்டிலேயே காய்கறிக் கழிவுகள், அரிசி களைந்த நீர் போன்றவற்றை கொண்டு எரிவாயு தயாரித்தல் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
பயிற்சி விவரம்
மார்ச் 7 - இயற்கை உரங்கள் தயாரித்தல்
மார்ச் 21 - மாடித் தோட்டம் அமைத்தல், சமயலறைக் கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரித்தல்
பயிற்சி நேரம்: காலை 09:30 முதல் மாலை 04:00 வரை
பயிற்சி கட்டணம்: ரூ.200/- (மதிய உணவு உட்பட)
ஆர்வம் உள்ளவர்கள் மையத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். மேலும் விவரங்களுக்கு
திட்ட மேலாளர்,
இயற்கை வள அபிவிருத்தி திட்டம்,
விவேகானந்தா கேந்திரம்,
கன்னியாகுமரி
தொலைபேசி: 04652-246296.