காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் மற்றும் தொழில்முனைய விரும்புவோர் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும் வகையிலும், புதிய தொழில்நுட்பங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் ஒரு நாள் பயிற்சி, ஒரு வார பயிற்சி என பல்வேறு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பயிற்சியின் முக்கியம்சமாக இறைச்சிக்காக வளர்க்க கூடிய கோழி இனங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் அளிக்கப்பட உள்ளது. இதில் கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, வாத்து வளர்ப்பு மற்றும் தீவன மேலாண்மை, நோய்தொற்று மற்றும் தடுப்பு முறைகள், குஞ்சுகளை பராமரித்தல், சிறிய பொரிப்பகங்களில் குஞ்சுகளை பொரித்தல், ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து கற்றுத்தரப்பட உள்ளது.
பயிற்சி விவரம்
நடைபெறும் நாட்கள்: 09.03.2020 - 14.03.2020 (6 நாட்கள் பயிற்சி)
நடைபெறும் நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
நடைபெறும் இடம்: உழவர் பயிற்சி நிலையம், ஏனாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்
தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 044-27264019
பண்ணை தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும், உபத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும், கிராமப்புற பெண்களுக்கும் இப்பயிற்சி பேருதவியாக இருக்கும். எனவே விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம். மேலும் பயிற்சிக்கு செல்ல விரும்புபவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்றை கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். தங்களுடைய ஆதார் எண்ணையும் மையத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.