பழைய ரூபாய் நோட்டுகளுக்கு அண்மைகாலமாக, மவுசு கூடி வருகிறது. சந்தையில் அதிகளவில் தேவை உள்ள ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தால் நீங்களும் லட்சாதிபதிதான். புரியவில்லையா? உங்களிடம் இந்த பழைய ரூபாய் நோட்டு இருந்தால் அதைக் கொடுத்துவிட்டு ரூ.7 லட்சம் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த 1 ரூபாய் நோட்டு இருந்தால் அதை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். அதுவும் வீட்டில் இருந்துகொண்டே நீங்கள் சம்பாதிக்க முடியும்.
பழசுக்கு மவுசு!
புழக்கத்தில் இல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கு சந்தையில் இப்போது அதிக தேவை இருக்கிறது. இவற்றைக் கொடுத்தால் லட்சக்கணக்கான ரூபாய் கொடுக்க தயாராக இருக்கும் பல ஆன்லைன் தளங்கள் உள்ளன. எனவே, உங்களிடம் பழைய நோட்டுகள் அல்லது 1, 2, 5 ரூபாய் நாணயங்கள் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்பது உறுதி செய்யப்படுகிறது.
1க்கு ரூ.7 லட்சம்!
பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை உங்களுக்கு கிடைக்கும். இந்த ரூ.7 லட்சம் ரூபாயை நீங்கள் வெல்லப் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும்
நிபந்தனைகள்
இந்த ஒரு ரூபாய் நோட்டு 1935ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த நோட்டில் ’கிங் ஜார்ஜ் - 5’ புகைப்படம் அச்சிடப்பட்டிருக்கும். மேலும் JW கெல்லியின் கையொப்பம் இதில் இருக்க வேண்டும். அந்த நோட்டுக்கு மட்டுமே உங்களுக்கு ரூ.7 லட்சம் வரை பணம் கிடைக்கும்.
எப்படி விற்பனை ?
ஆன்லைன் மூலமாகவே நீங்கள் விற்பனைச் செய்யலாம். OLX மற்றும் eBay போன்ற பல இணையதளங்கள் உள்ளன. அதில் அரிதான நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ஏலம் விடப்படுகின்றன. இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. உங்களிடம் உள்ள நோட்டை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்களை ஒரு விற்பனையாளராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவேற்றம் செய்தவுடன் அதை வாங்க விரும்புபவர்கள் தாங்களாகவே உங்களைத் தொடர்புகொள்வார்கள். அவர்களிடம் பேசி நீங்கள் பணம் வாங்கிக் கொள்ளலாம். அதேநேரத்தில், ஆன்லைன் மோசடிகள் அண்மைகாலமாக அதிகரித்து வருகின்றன. எனவே மிகுந்த கவனத்துடனும் இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க...
பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?
பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!