புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, அமெரிக்காவில் தமிழ் பள்ளி நடத்தி,திருக்குறள் (Thirukural) பாடத்துக்கு பரிசுகள் வழங்கி அசத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், ராயவரத்தைச் சேர்ந்தவர் ராமன் வேலு. பொறியியலில் இளங்கலை பட்டம், வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.
தமிழ்ப் பள்ளி
சிறப்பான பங்களிப்புக்காக, கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுஉள்ளார். மனைவி விசாலாட்சியுடன், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலம், டல்லாஸ் நகரில் தங்கி, சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, பிளோனோ தமிழ் பள்ளி ஆகியவற்றை ராமன்வேலு நடத்தி வருகிறார்.
இவர்கள் பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மீது கொண்ட பற்று காரணமாகவும், திருக்குறள் மீதுள்ள ஈர்ப்பு காரணமாகவும் ஒரு திருக்குறள் கூறினால் 1 டாலர் பரிசு என அறிவித்து, ஆண்டுதோறும் போட்டி நடத்தி வருகிறார். இவர் நடத்தும் பள்ளியில் 400 மாணவர்கள் திருக்குறள் கற்று வருகின்றனர்.
எதிர்பார்ப்பு
என் மனைவியின் சகோதரி மூலமாக அமெரிக்காவுக்கு 2013ம் ஆண்டு வந்து, ஐ.பி.எம்., நிறுவனத்தில் 'சீனியர் கன்சல்டன்ட்' மற்றும் பல்வேறு நிறுவனங்களில் மனிதவள அதிகாரியாக பணியாற்றினேன். நாங்கள் நடத்திவரும் பள்ளியில் 1,330 திருக்குறள்களில்
ஒன்றையாவது, பொருளுரையுடன் கூறினால் 1 டாலர் பரிசு என அறிவித்து செயல்படுத்தி வருகிறேன். இது நல்ல வரவேற்பை பெற்றது.
இப்போதுஅமெரிக்கா மட்டுமின்றி, உலக அளவில் இந்த போட்டியை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழர்களிடையே உருவாகி உள்ளது என்று ராமன் வேலு அவர்கூறினார்.
"மனநிறைவுடன் வாழ ஏழு வழிகள்" என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார். இவரது மகன், மகள் ஆகியோரும், தந்தை வழியில் தன்னார்வ பணிகள், தமிழ் ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க
இனி நேரடி வகுப்புகள் தானாம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்பு பற்றி தகவல் அளிப்பவருக்கு வெகுமதி!