தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட மனமுவந்து ஒரு நிறுவனம் சுமார் 10 நாட்கள் விடுமுறை அளித்திருக்கிறது. இந்த 10 நாட்களும், ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம் என அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
அது எந்த நிறுவனம் தெரியுமா? அதுதான் வீவொர்க். தீபாவளி பண்டிகைக்காக வீவொர்க் (WeWork) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. இந்த 10 நாள் மனநலனை மேம்படுத்துவதற்கு ஏற்ற செயல்களில் ஈடுபடலாம் எனவும் வீவொர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை
வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி திங்கள் கிழமை வருவதால் பெரும்பாலானவர்களுக்கு சனி முதல் திங்கள் வரை மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இந்நிலையில், வீவொர்க் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு 10 நாள் விடுமுறை அறிவித்துள்ளது.இந்த 10 நாட்களும் ஊழியர்கள் வேலையில் இருந்து ஓய்வு எடுத்து, பண்டிகை நேரத்தில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு, மனநலனில் கவனம் செலுத்தும்படி வீவொர்க் நிறுவனம் ஊழியர்களை ஊக்கப்படுத்துகிறது.
2-வது ஆண்டாக
வீவொர்க் நிறுவனம் இதேபோல கடந்த ஆண்டும் விடுமுறை அளித்தது குறிப்பிடத்தக்கது. ஊழியர்களின் கடின உழைப்பால்தான் நிறுவனம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் வீவொர்க் நிறுவனத்தின் அதிகாரி பிரீத்தி ஷெட்டி கூறுகிறார்.
இதனிடையே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான மீஷோவும் (Meesho) தனது ஊழியர்களுக்கு தீபாவளிக்கு அக்டோபர் 22ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனமும் ஊழியர்கள் ஓய்வு எடுத்து மனநலனில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வித்தியாசமான நிறுவனம்
பண்டிகையைக் காரணம் காட்டி அதிக விடுமுறை எடுக்கும் ஊழியர்களின் சம்பளத்தை எப்படி கட் செய்வது என சில நிறுவனங்கள் காத்திருக்கும் போது, இந்த நிறுவனத்தில் அறிவிப்பு சற்று வித்தியாசமானதே.
மேலும் படிக்க...
ராஜினாமா செய்பவர்களுக்கு 10% சம்பள உயர்வு!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!