கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கும்னு சொல்லுவாங்க. ஆனா கோடி கணக்குல கொடுக்குமா? கொடுத்திருக்கே.. எங்க.. யாருக்கு.. என்ன சம்பவம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளி ஒருவருக்கு நடந்த சம்பவம் தான் இணையத்தில் இப்போது பயங்கர வைரல். ஒரே இரவில் தூக்கத்தை தொலைத்த அளவுக்கு பணம் கிடைச்சிருக்கு அந்த மனுசனுக்கு. கூலி வேலை செய்யும் அந்த நபரின் வங்கிக் கணக்கில் வெறும் 17 ரூபாய் இருந்த நிலையில், திடீரென 100 கோடி ரூபாய் வந்துள்ளது. நீங்க நம்பலனாலும், அது தான் நிஜம். ஒரே இரவில் கோடீஸ்வராராக மாறிய அந்த நபரின் பெயர் முகமது நசிருல்லா மண்டல்.
நசீருல்லாவின் வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி வந்தது அவருக்குக் கூடத் தெரியாது என்பதுதான் சிறப்பு. சைபர் செல் நோட்டீஸ் அனுப்பியபோது தான் இதுபற்றி அவருக்கு தெரிய வந்துள்ளது. கிடைத்துள்ள தகவலின்படி, தேகானா சைபர் செல்,( Degana Cyber Cell) முகமது நசிருல்லா மண்டலுக்கு போன் செய்து அவரது வங்கிக் கணக்கில் திடீரென பணம் வந்தது குறித்து விசாரித்துள்ளார்கள்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பாசுதேப்பூர் கிராமத்தில் வசிக்கும் முகமது நசிருல்லா மண்டல், “போலீசாரின் அழைப்பு வந்ததால் பயந்து போயுள்ளார். நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை என அப்பாவியாக புலம்புகிறார். அந்த நபர் மேலும் கூறுகையில், “என்னுடைய வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி இருந்தது. முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் கணக்கைச் சரிபார்த்தேன். ஆனால், உண்மையிலேயே என் கணக்கில் 100 கோடி இருந்தது என ஆச்சரியத்தில் இருந்து இன்னும் மீளாமல் சொன்னதே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தனது வங்கிக் கணக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருப்பதாக நசிருல்லா கூறினார். PNB வங்கி அதிகாரிகள் தெரிவிக்கையிலும், தொழிலாளியின் கணக்கில் இதற்கு முன்னர் வெறும் 17 ரூபாய் மட்டுமே இருந்ததாக கூறியுள்ளனர்.
அந்த நபர் தனது கூகுள் பேயைச் சரிபார்த்தபோது, செயலியில் ஏழு இலக்கங்கள் தோன்றியதாகக் கூறினார். மண்டல் கூறுகையில், “எனது கணக்கில் இந்த பணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. நான் தினக்கூலியாக வேலை செய்கிறேன். காவல்துறையினரால் வழக்கு தொடரப்படுமோ அல்லது அடிப்பார்களோ என்ற பயம் அதிகமாக உள்ளது. என் நிலையால் குடும்ப உறுப்பினர்களும் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்” எனத் தெரிவிக்கிறார்.
அவரது வங்கிக் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவரது வங்கிக் கணக்கில் அதிக அளவிலான பணம் டெபாஸிட் செய்யப்பட்டது குறித்தும் போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் அவருக்குத் தெரிவித்து உள்ளனர்.
மேலும் காண்க: